உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

சிவசங்கரன் உள்ளிட்ட மாணாக்கர் சிலரும் பிள்ளையினிடம் நெருங்கிப் பழகினோம்."

அவரொடு பழகுவதை உயிரனைய ஆசிரியன்மார் சிலர் "கதிரைவேல் மதவாதப்பேய். அப் பேய் உன்னையும் பிடித்துக் கொள்ளும்.படிப்புப்பாழாகும். நீ மாணாக்கன்” என்று எச்சரிக்கை செய்துகொண்டிருந்தனர். அவ்வெச்சரிக்கை செவிடன் காதில் சங்கு ஊதுவது போலாயிற்று. அதையான் பொருட்படுத்துவதே இல்லை”.5

'அருட்பா மருட்பாப்போர்' நடந்த காலம் அது. வில்வபதி என்பாரைக் கதிரைவேலர் கொத்தைவால் சாவடியண்டை தாக்கிப் புடைத்ததாக வழக்கு. அதே நாள், கதிரைவேலர் பள்ளிக்கு வந்து தமிழ் கற்பித்த நாள்! அதற்கு மாணவர் ஒருவர் சான்று வேண்டும். இல்லையேல் குற்றம் உறுதியாகிவிடும். ஆனால் சான்று கூறத் திட்டப்படுத்தப்பட்ட நாள், ஆறாம் படிவப்பொறுக்குத் தேர்வின் தலைநாள்!

சோதனை

"என்செய்வேன்" என்சோதனை பெரிதாயிற்று சான்றுக்குச் செல்வதா? பரீட்சைக்குப் போவதா? இரண்டும் மாறிமாறி என்னை வாட்டின. ஒரு பக்கம் கதிரைவேல் இன்னொரு பக்கம் வாழ்வு; கதிரைவேல் அன்பே விஞ்சியது”“ “இரண்டு அரைநாள், பரீட்சையில் அமர்ந்து எழுதும் பேற்றை இழந்தேன். சோதனையின் முடிவைச் சொல்லவும் வேண்டுமோ?"?

"1898 ஆம் ஆண்டிலிருந்து 1904 ஆம் ஆண்டு வரை ஒரே ஒட்டம் ஓடிற்று. திடீரென மாடு படுத்தது"..8

மீள்பார்வை:

மீள்பார்வை பார்க்கிறார் திரு. வி. க. "பள்ளிப் படிப்பில் வேட்கை எனக்கு எங்கிருந்தெழுந்தது? தொடக்கத்தில் அது நோயால் நொறுக்கப்படுவானேன்?

மீண்டும் அது முகிழ்த்து மலர்ந்து கனியாது படுவானேன்? எங்கேயோ பிறந்த கதிரைவேற்பிள்ளைக்கும் எனக்கும் உறவு ஏற்படுவானேன்? அவரை எனது பள்ளிக்கூடத்தில் சேர்த்ததெது? வழக்கில் என் சான்றின் அவசியத்தை உண்டுபண்ணியது எது? இரண்டு நாளும் வண்டிகளால் தொல்லை விளைத்தது எது?