உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

119

தொடங்கப்பட்டது. பாடங்கள் எனக்கு எளியனவாகவே தோன்றின. பெரிதும் பழம் பாடங்களாகவே தோன்றின; பல முன்னரே கேட்டவையல்லவோ?"

பள்ளிக்கல்வி

இராயப்பேட்டை, முத்துமுதலிவீதி ஆரியன்பிரைமரி பள்ளியில் மூன்றாம் வகுப்பில் படித்தார் திரு.வி.க. மூன்றாம் வகுப்பையும் நான்காம் வகுப்பையும் இணைத்து ஒரு கட்டுரைப் போட்டி! தென்னை, வாழை, பசு, நாய் ஆகிய நான்கனுள் ஒன்றைப்பற்றி எழுதலாம். வாழையை எடுத்துக்கொண்டு வாங்கினார்! என்ன வாங்கினார்? 'சோதனையில் என் கட்டுரை முதன்மையாக நின்றது. பரிசில் எனக்கே கிடைத்தது!”2 தமிழ் தன் தனிப் பெருந்தொண்டர்க்கு வைத்த முதற்றேர்வும் முதன்மைத் தேர்வும் ஈதே!

வெசிலி பள்ளியில் நான்காம் வகுப்புப் பயின்றார் திரு.வி.க. அப்பொழுது 'பற்றியந்' தப்பலால் இடக்கால் முடங்கி நடக்க இயலாதவர் ஆனார். உடல் என்புக் கூடாயிற்று. நோய் ஓராண்டும் ஓய்வு ஓராண்டும் குடும்பத் தொல்லைகள் ஈராண்டும் ஆக நாலாண்டுகள் விழுங்கப் பட்டன! நான்காண்டுகள் கழித்து மீண்டும் நான்காம் வகுப்பிலே பயில நேர்ந்தது.'

இலக்கணம்

நான்காம் வகுப்பிலேயே கற்றதொரு நூல்; அது போப் ஐயர் இலக்கணம். "ஆசிரியர் (தேவதாசர்) அன்பு, அவர் வீட்டை என்வீடாக்கிற்று. அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன்; சந்தேகங்கேட்டுத் தெளிவேன். ஆசிரியர் மனைவியாரால் போப் ஐயர் இலக்கணம் மிகத் தெளிவாகப் போதிக்கப்படும். தமிழ் இலக்கணத்தில் முதல் முதல் எனக்குச் சுவையூட்டியவர் அவ் வம்மையாரே யாவர்"4

தமிழ்ச் செல்வம்

இலக்கணச் சுவை கண்ட திரு.வி.க. ஆறாம்படிவம் படிக்கும் போது ஒரு தமிழ்ச்செல்வத்தைக் காண்கிறார்:

கதிரைவேல் எங்கள் பள்ளியில் முதல் முதல் அளித்த காட்சி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தமிழ்ச்செல்வம் நம் பள்ளிக்கு வந்ததே என்று யான் ஆனந்தமெய்தினேன்.யானும்,