உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

123

இல்லை என்றார் திரு. வி.க. ஆயின் மடத்தார் கட்டளை வேண்டும் என்றார் துறவியார்! அடிகட்குத் தொல்லைவேண்டா என்று விடைபெற்றுக்கொண்டார் திரு. வி.க.

தணிகாசலர்

விடைபெற்றுக்கொண்டது தடையாயிற்றோ? "உடையாய் என்னைக் கண்டுகொள்ளே” என்பது போல் மயிலை தணிகா சலராக முன்னின்றது. “சூரியனார் கோயில்சாமியார் எற்றுக்கு? இந்தப்பாவியிடம் வரலாகாதா?" என அருளொழுக அழைத்தது! அவ்வழைப்பு எய்ப்பினில் வைப்பாயிற்று!

தணிகாசலர் திருவருட்பயன் கற்பித்தார்; சிவப்பிரகாசம் கற்பித்தார். அவரிடம் "சிவப்பிரகாசம் ஒன்று பாடங்கேட்டால் போதும்; மற்றைப் பதின்மூன்றும் தாமே விளங்கிவிடும்" என்கிறார் திரு.வி. திரு. வி. க. 6

"கலியாணசுந்தரத்திற்கு இலக்கிய இலக்கணம் போதிக்கலாம். சாத்திரம் போதித்தலாகாது; அவன் பின்னே சாத்திரத்தை நாசஞ் செய்வான்; கண்ட சாதியார்க்குப் போதிப்பான். அவன் சீர்திருத்த உள்ளமுடையவன். அது வயதில் தாண்டவம் புரியும்" என மயிலையார்க்குக் கோள் உரைக்கப்பட்டதாம்! அக் கோளர் சுவாமிநாத பண்டிதராம்! ஆனால் மயிலையார் வழக்கம் போலவே கற்பித்தார். வட மொழியும் கற்பிக்கத் தொடங்கினார்.

திருக்குறள் சிதம்பரர்

8

திருக்குறள் சிதம்பர முதலியார் என்பார், இராயப்பேட்டை யார். அவரை அணுகினார் திரு. வி. க. சங்க இலக்கியம் பயிலும் வேட்கையை வெளியிட்டார். அவரோ, யானா ஆசிரியன். அப்பதவிக்கு யான் அருகன் அல்லன்! போதனைக்கும் எனக்கும் எவ்வளவு தூரம்? சேர்ந்து படிக்கலாம்" என்றார். அப்படியே சேர்ந்து படித்தனர். தணிகாசலர் எழுப்பிய வடமொழி வேட்கை பெரிதாயிற்று. பாம்பன் குமரகுருதாச அடிகள், மருவூர் கணேச சாத்திரியார், கிருட்டிணமாச்சாரியார், கடலங்குடி நடேச சாத்திரியார் ஆகியோரிடம் வாய்த்தபோதெல்லாம் கற்றார். வடமொழி அருகநூல்களைப் பார்சுவநாதர், சக்கரவர்த்தி நயினார் ஆகியோரிடம் பயின்றார்; பாலியும் அரபியும் பயின்றார்; ஆங்கிலப் புலமையையும் வளர்த்தார். ஒரு தூண்டல்: "கற்றிலனா யினும் கேட்க” என்பது!