உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இசை நாட்டம் :

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

அவரது

இசைப்பயிற்சியிலும் நாட்டம் எழுந்தது. என்ன வாயிற்று? சை பயில் ஒருவரிடஞ்சென்றேன். வழக்க வொழுக்கம் அவரை ஆசிரியராக ஏற்க என் மனத்தை இசைவிக்க வில்லை. வேறு ஒருவரை அடைந்தேன். அவரும் முன்னவர்க்கு அண்ணாராகவே விளங்கினார். இன்னொரு வரை அணுகினேன். அவரும் முன்னவரலாகவே காணப்பட்டார். இசைப் பயிற்சியில் எழுந்த வேட்கை வீழ்ந்தது."

"ஆனால் இசையில் வெறுப்புத் தோன்றவில்லை. இயற்கையும் இறையும் இசைவண்ணமாயிருக்கும் போது என் உள்ளம் எப்படி இசையை வெறுப்பதாகும்? இசைக்குச் செவி சாய்ப்பதில் எனக்குத் தணியா வேட்கையுண்டு. இயற்கை இசையில் என் மனம் மூழ்கும். அதில் யான் யோகியாவேன்.

நாடகத்தில் ஈடுபாடு கொண்டிலரோ திரு. வி. க: “வாழ்க்கை நாடகத்திலும், இயற்கை நாடகத்திலும், காவிய ஓவிய நாடகங் களிலும் யான் கருத்திருத்தி வருபவனானேன்' என்கிறார்.'

“பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னேமேல்வரு மூப்பு மாகி

நாளுநாம் சாகின் றேமால் நமக்குநாம் அழாத தென்னே”

என ளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, வாழ்வு நிலையாமை ஆகியவற்றைச் சொல்கிறது பழங்குண்டலகேசிப் பாட்டு, உடற் பருவ மாற்றம் பற்றிய அளவிலே இப்பாடற் பொருள் அமையின், கையறு நிலையும் இரங்கலுமின்றி எஞ்சுவ தென்ன?

அறிவுப் பிறப்பு

அறிவு வரவர அறியாமை அகல்வு அன்றோ -அறிவுப் பிறப்பு அடுத்தடுத்துத் தோன்றத் தோன்ற, அறியாமை இறப்பு நொடிநொடியும் அமைதலன்றோ - உள்ளுறையாம் பொருள்! அப்பொருள் கொள்ளாக் கால் அஃது அழுகைப் பொருளாம்! எழுகைப்பொருளாமா?

திரு.வி.க. கல்விக்கண் உண்டாய மற்றைப் பிறப்பை மனங்கொள உரைக்கிறார் :