உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

உள்ளது. வயிற்றைத் தமிழுக்கு வைத்து, நெஞ்சத்தைப் பிற மொழிக்கு வைக்கும் வஞ்சமாக அல்லது இரண்டகமாக உள்ளது! தமிழுக்குக் கேடு பயக்கும் செய்தியா கொட்டை கொட்டை எழுத்துகளில் பத்தி பத்தியாக வெளிப்படும்! மின்னற் பளிச்சிடும்! தமிழ்ப் பயிற்று மொழி, தமிழ் ஆட்சிமொழி, தமிழிசை, தமிழ் வழிபாடு இன்ன செய்திகளா வெளிப்படுத்துவதே இல்லை. முழுக்க முழுக்கத் திரையிட்டு மறைப்பதை மூச்சாகக் கொள்கின்றன. ஒரு வேளை புறக்கணிக்க முடியா நிலையில் வெளியிடவேண்டி நேரின் தாழ்த்தப்பட்ட இடத்தினும் தாழ்த்தப்பட்ட இடந்தந்து புறக்கணிப்பை வெளிப்படப் புலப்படுத்தத் தவறுவதில்லை! அல்ல கருத்தைப் பளிச்சிட்டுக் காட்டும் இதழ், அதற்கு மறுப்பு வருங்கால் ஒத்தவுரிமை தந்து வெளிப்படுத்துதல் அன்றோ நேர்மைத் துணிவு- கொள்கைமுறை! ஆனால், அவ்வல்ல கருத்தை மறுக்கும் மறுப்பைப்பற்றி ஆயிரம்பேர் எழுதினும் மூடி மறைத்து, ஓரிருவர் அவ்வல்ல கருத்தினை வரவேற்று எழுதி யிருந்தால் தேடி எடுத்துப் படம்பிடித்துப் போட்டுப் பறை சாற்றும்! இது தமிழிதழ்நிலை! தமிழனே நடத்தும் தமிழிதழின் நிலை! திட்டமிட்டுக் கடைப்பிடித்து வரும்கொடு நிலை இது. இதுவே 'பத்திரிகை தர்மம்' என்று அவர்களால் பகரப்படுவதாம்!

‘தேச பக்தன்'

தேசபக்தன் என்ன செய்தான்?

<<

'அக்காலத்தில் சட்டசபையில் ஆங்கிலமே பேசப்படும். தமிழர்க்கும் தமிழ் நினைப்பு வருதல் அருமை. அப் பஞ்ச நாளில் சேலம் பி. வி. நரசிம்ம ஐயர் சட்டசபையில் ஒரு முறை தமிழில் பேசினார். அதுபற்றி எப்பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை. தேசபக்தன் மட்டும் ஒரு குறிப்புப் பொறித்தான். அதுகண்ட நரசிம்ம ஐயர் தேசபக்தனுக்கு வாழ்த்துக் கூறினார்

தேசபக்தன் செய்த தலையாய தமிழ்த்தொண்டு ஒன்றைச் சுட்டவேண்டும். அது விடுதலைத் தொண்டின் சார்புடையதே எனினும் தமிழ்விடுதலையும் கொண்டதேயாம். தேயத் தொண்டர் வ.வே.சுப்பிரமணிய ஐயரும், பாவலர் கோமான் பாரதியாரும் புதுவையைப் புகலிடமாகக் கொண்டிருந்த காலம், தேசபக்தன் உலாவந்த காலம். அப்பொழுது தேசபக்தன், அவர்கள், “ஆங்கில அரசின் எல்லையில் உலவும் உரிமையுடையராதல் வேண்டும்" என்று கிளர்ந்தெழுந்தான். அதன் பயன் என்ன? வ. வே. சு. எழுதுகின்றார்: