உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

135

தனித்தமிழ் இயக்கம் தோன்றி, தமிழிசைச்சங்கம் தோன்றி, தமிழ்நாடு என்னும் பெயர் தோன்றி, தமிழாட்சி மொழிச்சட்டம் தோன்றி, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழாட்சி மொழித்துறை. தமிழ்ப்பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத்தமிழ்ச் சங்கம் இன்னவெல்லாம் தோன்றி -"எங்கும் தமிழ் எல்லாம் தமிழ்" என்று முழங்கிக்கொண்டு, அரசியல் வேட்டையாடும் இந் நாளையிலேயே இதழ் நிலை இத்தகைத்து எனின், ஆங்கில அயல்மொழியே ஆண்டவன் மொழியாகவும், வட மொழியே தெய்வமொழியாகவும் கோலோச்சிய நாளில் தமிழிதழ் எப்படி இருந்திருக்கும்?

அற்றைநாள் இதழ்

(4

"அந்நாளில் நாட்டுமொழிப் பத்திரிகைகளில் அயல் மொழி நாற்றம் வீசும். அரசியல் குறியீடுகள் அந்நியத்தில் அப்படியே பொறிக்கப்படும். 'தேசபக்தன்' பத்திரிகையுலகில் புரட்சி செய்தான்.எப்படிச் செய்தான்? படிப்படியே செய்தான். புரட்சி நிகழ்ந்ததென்று பத்திரிகையுலகுக்கே தெரியாது. புரட்சிகளைத் தேசபக்தனிற் காணலாம். தேச பக்தன் தமிழாக்கிய அரசியல் சொற்களும் சொற்றொடர்களும் குறியீடுகளும் இப்பொழுது பத்திரிகைகளிலும் மேடைகளிலும் பிறவிடங்களிலும் ஏற்றமுற்று அரசு புரிதல் வெள்ளிடைமலை.

"தமிழ் நாட்டில் பல குறைபாடுகள் உண்டு. அவைகளில் ஒன்று பெருந்தலைவர்கள் தமிழ் தெரியாதென்று ஆங்கிலத்தில் நாவன்மை காட்டிவந்தமை. அது பற்றித்தேச பக்தன் எழுப்பிய கிளர்ச்சி தலைவர்களைத் தமிழ் பேசச் செய்தது. இந்நாளில் தென்னாட்டு மகாநாடுகளின் நிகழ்ச்சி முறைகளும் காரியக் கூட்டங்களின் நிகழ்ச்சி மறைகளும் தாய்மொழியில் நடைபெற்று வருவது கண்கூடு. மேடைகளிற் பேசுதற் பொருட்டுத் தலைவர்கள் தேசபக்தனைப் படித்ததும், தமிழாய்ந்த ஐரோப்பியப் பாதிரிமார் பலர் தேச பக்தன் சந்தாதாரர் ஆயதும் ஈண்டுக் குறிக்கத் தக்கன. தேசபக்தன் தமிழரை அந்நிய மோகத்தினின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகையாகாது."

வஞ்ச இதழ்கள்

776

இவற்றைத் தமிழ்ச் செய்தித் தாள்கள் பெரும்பாலான வற்றின் உண்மை எப்படி உள்ளது? தமிழால் பிழைக்கும் வழியாகவே