உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

குறிக்கிறார் : 'தேசபக்தனுக் கென்று ஒருதனி நடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துக்கள் விளங்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாடோறும் எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்குரிய இயற்கை யாகியது. பழைய தொடர்மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின. சமயம் நேர்ந்துழிச் சிலவேளைகளில் அவை தலை காட்டும்.

CC

'இலக்கணம் தமிழ்ப்போதகாசிரியனிடம் கொஞ்சிக் குலாவும்; தினப்பதிப்புப் பத்திரிகாசிரியனிடம் அது கொஞ்சிக் குலாவுவதற்கு இடம் பெறுமோ? இவன் விமானத்தில் பறப்பவ னல்லனோ? இலக்கணநூல், என்னில் ஒன்றி அத்துவிதமாயிற்று. யான் இலக்கணமானேன். என் நடை எங்கெங்கேயோ ஓடும்; திரியும்; அலையும்; பொருளுக்கேற்ற கோலந்தாங்கும்; இடத்துக் கேற்ற நடம்புரியும்.

இற்றை இதழ்நடை

பலலக்கம் விற்பனையாகும் இதழ் குமுதம். அதன் 23.8.86 ஆம் நாள் இதழ். தலைப்புச் செய்திகளில் மட்டும் ஜெயிக்கும் (2) கார்ட்டூன் (16) ரேடியோ (19) ஜன்பாத், கேஸ் (20) பாஷன் (31) போன் (39) மானேஜர் (56) நபர் (61) ஜெயில் (72) டய்ங் நாட்ய்ங் (77) ஆபீஃ (95) என்னும் சொற்கள்! இவையெல்லாம் குமுதத்திற்குத் தமிழ்! இவற்றைப் போடுவதெல்லாம் தமிழ்த்தொண்டு!

குமுதத்தின் தொடர்தலைப்பு ஒன்றின் பெயர் 'லைட்ஃ ஆன்'; இனி அதில் வரும் செய்தி எப்படியிருக்கும்? எழுதுபவர் பெயர் வினோத்; நடையைக் கேட்கவேண்டுமா? திருக்குறளார் என்றால் பெயர் சொல்லாமலே நாடறிந்தவர். அவர் நேருரையாடற் செய்தி இதே குமுத இதழில் இடம் பெற்றுள்ளது. நாத்தழும் பேறக் குறளைச்சொல்லிவரும் அவர் உரயாடலில்- டூட்டி, சார், பிரசங்கம், காரியங்கள், சினிமா சீப்மினிஸ்டர், புரோக்ராம், ப்ரிவ்யூ தியேட்டர், சந்தேகம், ஃபேமஸ் இன்னவை இடம் பெறுகின்றன என்றால் பேட்டி காணும் 'சுகாசினி' உரையாடலில் எத்தனை தூய சொற்கள் இருக்கும்! நேருரையாடல் தொகுப்பு, 'பால்யூ' எனின் விட்டுவைப்பாரா மொழித் தூய்மையை? இனி 'ஜூனியர் விகடன்' 'துக்ளக்' முதலிய பெயர்களுடைய இதழ்கள் தாமா மொழியாக்கம் செய்பவை? பெயரே முத்திரையிட்டுக் காட்டு கின்றனவே!