உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

இதழ்தொண்டின் சிறப்பு

133

இதழ்த்தொண்டு தமிழ்த்தொண்டாகுமோ? எனின், அதனினும், விஞ்சிய தமிழ்த்தொண்டு ஒன்று உண்டோ? எனலாம். உண்பது போலவும், பருகுவதுபோலவும் கட்டாயப் பொருளாகி விட்டது இதழ்! தேடித்தேடி வந்து வாங்கிப் பயன் கொள்வது ஒருபாலும், தேடித்தேடிப் போய் வழங்கிப் பயன் செய்வது ஒருபாலும் என விரிந்து வருவது இதழ்த் தொண்டு. காலையில் குளம்பி (காபி) தேநீர் குடியாத கற்றவரைக் காணினும், இதழ்பாராக் கற்றவரைக் காணல் அரிதெனக் காட்டுவதும் நாட்டுவதும் இதழ்! ஓரிதழ் ஒன்பது பேரையென்ன அதன் ஒன்பது மடங்குப் பேரையும் பார்க்க வைக்கும் பொதுப்பொருள் 'இதழ்'. அத்தகு இதழ்த் தொண்டுதானே எழுத்துக் கூட்டிப் படிப்பார் முதல், நாட்டின் தலையெழுத்தையே கையில் வைத்திருப்பார் வரை சமன்மைப் பயன்கொள்ளும் அரும்பொருள்; அவ்விதழ்த் தொண்டினால் விளையும் ஆக்கத்திற்கு அளவுண்டோ? இதழாசிரியன் கயமைக் கிருப்பானால் அதனால் விளையும் கேட்டுக்கும் அளவுண்டோ? திரு.வி.க.வின் தமிழ்த்தொண்டு நாடு தழுவியதாயிற்று; கடல் கடந்து, உலகு தழுவியது மாயிற்று!

"நவசக்தியின் தமிழ்நடம் வெளிநாடுகளிலும் புகுந்தது, இலங்கை, பர்மா, மலேயா, மொரிஷியஸ், நெட்டால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளிலும் நவசக்தியின் கலை வீசியது. தமிழ்நாட்டினின்றும் தத்தம் தாய்நாடு நோக்கும் ஐரோப்பியப் பாதிரிமார் பலர் நவசக்தியை மறப்பதில்லை".+ இதழ்நடை

4

கற்பதனையே கடமையாகக் கொண்டு பயில வந்த மாணவர்க்குப் பயிற்றும் தமிழ்நடைக்கும், பல திற பலநிலைப் பொதுமக்களுக்கு உணர்த்தவிரும்பும் தமிழ்நடைக்கும் வேற்றுமை வேண்டுமன்றோ! ஒரு பொருளைத்தருவது மட்டுமன்றித் தரும் வகையும் ஆளைப்பொறுத்தெல்லாம் வேறுபடுமன்றோ! சுருங்கச் சொன்னால் எடுத்துண்ணவும் அறியாக்குழந்தைக்கு அன்பால் ஆர்வத்தால் அரவணைப்பால் குழைத்துக் குழைத்து ஊட்டும் தாய்போலவும் இதழாசிரியன் தன் எழுத்து நடையையும் பொருளையும் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். பயன் பெருக்கம் என்பது, விரும்பிப் படிப்போர் பெருக்கமே யன்றோ! திரு.வி.க. இதழ்நடையை நெறிப்படுத்திக் கொண்ட வகையைக்