உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இதழ்த்தொண்டு

திரு.வி.க.நடத்திய இதழ்கள் இரண்டு. முன்னது தேசபக்தன்; பின்னது நவசக்தி. இரண்டும் ஆணும் பெண்ணுமாம் இரு மகவாகவே பேணிவளர்க்கப்பட்டன. அஃறிணையாம் இதழை, ஆண்பால் பெண்பால் படுத்துக் கொஞ்சி மகிழ்ந்தவர் திரு.வி.க. இதழ் மக்கள்

ஈரிதழ்களையும் ஒருங்கு வைத்து ஒப்பிட்டுத் திறனாய்கிறார் திரு.வி.க. இரு குழந்தையின் இயலும் செயலும் இத்தகைத்தென அவற்றின் பெற்றோர் தெளிந்துரைத்தலினும் மற்றோர் உரை சாலுமோ?

'தேசபக்தன்' மகன்; 'நவசக்தி' மகள்; 'தேசபக்தன்' லிமிடெட்டுள் புகுந்தான்; 'நவசக்தி' அதில் புகாதவள்; தேச பக்தனில் பெரிதும் அழிவு வேலை நடந்தது; நவசக்தியில்பெரிதும் ஆக்கவேலை நடந்தது. ஆவேசமும் பரபரப்பும் தேசபக்தனில் அலைந்தன; அன்பும் அமைதியும் நவசக்தியில் தவழ்ந்தன. தேசபக்தன் அதிதேவதை ருத்ரன் எழுதுகோல் பாசுபதம். நவசக்தியின் அதிதேவதை சிவம்- எழுதுகோல் குழல். தேசபக்தன் நடையில்காளி; நவசக்தி நடையில் உமை'

-

வெசிலியன் கல்லூரியில் நன்மொழி கூறி வழியனுப்பும் விழா. அவ் விழாவில் ஏற்புரை வழங்கிய திரு.வி.க. வெஸ்லியன் மிஷனால்நான் பெற்ற நலங்கள் பல. அவைகளுள் சிறந்த ஒன்று கிறிஸ்துவச் செல்வமெனும் அந்தணச்செல்வம். அதன் வேலையை இக் கல்லூரியில் செய்துவந்தேன். அதைத் தொடர்ந்தே இனி நாட்டுக்கல்லூரியில் செய்யப்புகுந்தேன் என்றார்.

கல்லூரிப் பணியும் ஆசிரியப் பணியே; இதழ்ப்பணியும் ஆசிரியப் பணியே. ஆசிரியப் பொதுநிலை மாறிற்றில்லை. ஆனால், பணிசெய்யும் வழி நிலையில் மாறுதல் மிகவுண்டு. "யான் தமிழ்ப் போதகாசிரியனாக இருந்தவன். இப்பொழுது தமிழ்ப்பத்திரிகா சிரியனானேன்” என்றார் திரு.வி.க.