உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

131

திரு.வி.க. நெஞ்சம் அரசியலில் தோய்ந்தது. நாட்டுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்ற வேட்கை முருகிக் கிளர்ந்தது. அதன் முடிவு 5.12.1917 இக் கல்லூரிப் பணியை விடுத்தார்.7.12.1917இல் தேசபக்த ஆசிரியரானார்.

தேசபக்தனை இரண்டரை ஆண்டு வளர்த்து விடுத்தார். பின்னே நவசக்தியைத் தொடங்கி இருபதாண்டுகள் வளர்த்தார். கல்லூரிப்பணியையும் இதழ்ப்பணியையும் பின்னே நிகழ்ந்த அரசியல் தொண்டையும் மீள்பார்வை பார்க்கிறார் திரு. வி. க. "யான் வெஸ்லி கல்லூரியை விடாதிருந்தால் பள்ளிப் பாட நூல்கள் பல என்னால் எழுதப்பட்டிருக்கும். பல்கலைக்கழகச் சோதனையாளனாகியிருப்பேன்; பொருட் செல்வம் பெறுதற்குப் பலவித வாய்ப்புகள் கிட்டியிருக்கும்; யான் வீடுவாசல் உடைய வனாயிருக்கலாம். பொருட்செல்வப்பேறு எனக்குக் கிடைக்குமோ? அதற்கும் எனக்கும் எவ்வளவுதூரம்? அத்திரு கருவில் அமைய வில்லை. ஆதலின் யான் வெஸ்லி கல்லூரியை விடுத்து விலகல் நேர்ந்திருக்கலாம்.

"இன்னொன்று என் ஊகத்தில்படுகின்றது. அதையும் இங்கே இரண்டொரு சொல்லால் சொல்கிறேன். முப்பத்து நான்கு வயதுவரை எனது வாழ்க்கை ஒரு விதமாக இயங்கி வந்தது. அது மட்டும் வாழ்க்கைக்குத்தகுதியாகுமா? ஆபாசங்களில் வாழ்க்கை படியும் வாய்ப்பையும் பெறுதல் வேண்டும். அஃதொருவிதச் சோ தனை. அச் சோதனைக்கென்று கல்லூரியை விடுத்து அகலல் நேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை. அரசியல் உலகம் ஆபாசம் உடையதா? அச் சோதனைக்குரிய குறிப்புக்களையும் பொறிக்க முயல்கிறேன்"!'

12

1. QUIT.

4.வா.கு.224

கு. 222.

2.வா.கு.223. 5.வா.கு.230

3.வா.கு.238

6.வா.கு.230

7.வா.கு.229-30

8.வா.கு.237-7.

9.வா.கு.237-8.

10.வா.கு.241.

11. வா. கு. 245.

12.வா.கு.249-50.