உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பெற்றமையால் ஏற்பட்ட இடவாய்ப்பே அது. அப் பேராசிரியருக்கு நிகழ்ந்த வழியனுப்பு விழாவில் திரு. வி. க. பேசினார். அப் பேச்சைக் கேட்ட பழைய ஆசிரியன்மார் - அங்கேதானே திரு. வி.க.பயின்றார். "நீ கணிதப் பேராசிரியனாக வரத்தக்கவன். கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவால் தமிழ்ப் பேராசிரியனாக வந்தனை" என்றனர்." வெசிலியில் பேராசிரியராய ஆண்டு 191. பணிபுரிந்த காலம் ஒன்றரையாண்டு.

வெசிலியின் மாணவராகத் திரு.வி.க. இருந்தநாளிலேயே தமிழ்ச்சங்கம் ஒன்று காணப் பெரிதும் முயன்றார். அம் முயற்சிக்குச் சே.கிருட்டிணமாச்சாரியார் இடந்தரவேயில்லை. பின்னர்த் தசரத ராமசாமி என்னும்மாணவர் முயற்சியால், சச்சிதானந்தம் பிள்ளை மெய்ப் பொருளியல் பேராசிரியராகப் பணிசெய்த காலத்தில், அவர் துணையால் தமிழ்ச் சங்கம் காணப்பட்டது, அச் சங்கத் தலைவராகும் வாய்ப்பு திரு.வி.க.வுக்கு வந்தது. அதனைப் பல்லாற்றானும் பேணிவளர்த்தார்.

கல்லூரிவகுப்பில், பாடத்தின் அளவில் திரு.வி.க.நிற்ப தில்லை. பாடத்துடன் பலதுறைகளைக் கலந்து கற்பிப்பார். மில்தன், செல்லி, கீட்சு முதலியவரோடு மாணவர் உறவாட விடுவார். வள்ளுவர், இளங்கோ. செயங்கொண்டார், வில்லி முதலியோரைக் காட்டுவார். மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் மாணாக்கரிடை எழுப்புவார். மாணவரும் அவரும் உடலுயிர் போலாயினர்.

அரசியலாசிரியர்

கோபால கிருட்டிண கோகுலர்படத்திறப்புவிழா ஒன்று கல்லூரியில் நிகழ்ந்தது. திரு. வி. க. உரையாற்றினார். கல்லூரி முதல்வர் 'நீல்' தைைலமையேற்றிருந்தார். அவர் முடிவுரையில் நம் தமிழ்ப்பேராசிரியர் அரசியலாசிரியராகவும் இன்று விளங்கினார்" என்று கூறினார்." 'அப்படியே' ஆக என்றொரு கூக்குரல் ஒரு மூலையில் எழுந்தது.

மூலையில்மட்டுமோ எழுந்தது! அகத்தே எழுந்திருந்த ஒன்றுதானே, புறத்தே வெளிப்பட்டது!

இதழாசிரியர்

தன்னாட்சிக் கிளர்ச்சியை ஒடுக்க நயன்மைக் (நீதிக்) கட்சி எழுந்தது. அன்னிபெசண்டு அம்மையாரைக் காப்பில் வைத்தது.