உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

129

ஆம்! திருவருள்வழுத்தும், ஆண்டவன் நன்றியும் தமிழாகக் கலந்து இனித்தன! அவ்வினிப்பு எதிர்காலத் தமிழ்த்தொண்டுக்கு ஓரேணியாயிற்று!

தமிழ்வாழ்வு

ஓய்வு நேரத்தைத் தமிழ்ப் பொழுதாக்கிய இரத்தினர் ஓய்வு நாளை வாளா விட்டுவைப்பரோ? தேம்பாவணிக்குப் பொருள் கேட்டார்; சைவசாத்திர ஆய்வும் செய்தார். இவற்றின் பயன் என்ன? "மனந்திரும்பல், முறையீடு முதலியவற்றின் நுட்பங்கள் என்னை அறியாமலே எனக்குள் திடீரென விளங்கின"" என்கிறார் திரு.வி.க.

திரு. வி. க. திருமணம் செய்துகொள்ள விரும்பாதிருந்தார், இதனை அறிந்தார் எண்கவனகர் (அட்டாவதானர்) பூவை கலியாணசுந்தரர்! கலியாணம் வேண்டாக் கலியாணரைக் கலியாணர் ஒரு துறவுமடத்துச் சேர்க்க விரும்பினார். செய்தி தலைமையாசிரியர் இரத்தினர் செவிக்கு ஏறிற்று.

அவர் திரு.வி.க. வினிடம் மரம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார். "அம் மரம் எவ்வெவ் வழிகளில் பயன்படுகிற தென்பதை உங்களுக்கு விரித்துச் சொல்ல வேண்டுவதில்லை. எத்தனை பறவைகள் அதில் தங்குகின்றன. அதனடியில் எத்தனை மாடு கன்றுகள் படுத்திருக் கின்றன. பாருங்கள். நீங்கள் இப் பள்ளியில் நல்ல மரமாயிருக் கிறிர்கள். நாடோறும் எவ்வளவு பிள்ளைகள் உங்களிடத்தில் கூடுகிறார்கள்! அவர்கட்கெல்லாம் நீங்கள் பயன்படுகிறீர்கள். மடத்தில் இவ்வளவு உயிர்கட்கு நீங்கள் பயன்படுவீர்களா? நீங்கள் மட்டும் ஒரு வேளை நலம் பெறலாம். இவைகளை யெல்லாம் கூர்ந்து உன்னி உங்கள் விருப்பப்படி நடக்க" என்றார்.?

அம்மட்டில் நின்றாரோ? மடம் நோக்க ஏவியது மணவாமை நோக்கமேயன்றோ! அதற்கும் முடிவு கண்டார் இரத்தினர். தொண்டுக்குத் தனிவாழ்க்கை கூடாது.மணவாழ்க்கை வேண்டும்” என்று வலியுறுத்தினார். தொண்டர்க்கு இத் தூண்டல் பயன் செய்யா தொழியுமோ?

பேராசிரியர்

ஆயிரம் விளக்குப் பள்ளியில் இருந்து, அதன் சார்புடைய வெசிலிக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார் திரு. வி. க. அக் கல்லூரியில் பேராசிரயராக இருந்த கிருட்டிணமாச்சாரியார் ஓய்வு