உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

நல்லகாலம்

இளங்குமரனார் தமிழ்வளம் -25

பென்சர் குழுமத்திற்குச் சென்றார் திரு. வி.க. பார்க்கர் என்பாரிடம் நேர்முகக்காணல் நேர்ந்தது. "எனது கையெழுத்தின் சிறுமையை வெளியிட்டேன். அவர், எல்லார்க்கும் கையெழுத்து நன்றாயமையுமா? என் கையெழுத்தைப் பாரும் என்றார். 'நல்லகாலம்' என்று மகிழ்ச்சியுற்றேன்" என்கிறார் திரு. வி.க.

நாமும் நினைக்கிறோம்; பார்க்கருக்கு வாய்த்தகோணல் எழுத்து மட்டுமோ-கோணலற்ற உள்ளமும் அன்றோ - அவ்வூழியக் கொடையை அருளிற்று! அத்தகு கோணலற்ற உள்ளம் உடைய தலைமையாசிரியர் சான் இரத்தினம்.

ஆசிரியர்

திரு.வி.க. ஆயிரம் விளக்கு வெசிலியன் பள்ளியில்ஆறாம் வகுப்பு ஆசிரியரானார். அப் பள்ளியில் ஆறாண்டுகள் பணி செய்தார். அவ்வளவு நெடுங்காலம் பணிசெய்ய வாய்த்தது எதனாலாம்?

"கண்டிப்பு தண்டிப்பு, அதிகாரம் முதலிய உருமாற்ற பேய்கள் ஆயிரம் விளக்குப் பள்ளியில் நடம்புரிதல் அருமை அவை ஒரோ வழி நடம்புரிய எழினும், ஆங்கு வீற்றிருக்கும் அன்புத் தெய்வத்தின் முன்னர் ஒடுங்கி ஒதுங்கும்”5

இதற்கு மறுதலையாக ஆயிரம் விளக்கு இருந்திருந்தால்?

"கண்டிப்பும் தண்டிப்பும் அதிகாரமும் பள்ளியிற் பங்கெடுத் திருப்பின், யான் அங்கே ஆறாண்டு கழித்திரேன்; அரையாண்டில் ஓடிவந்திருப்பேன்'

திரு. வி.க. 'தமிழ் பயின்றவர்' என்ற செய்தி இரத்தினர்க்கு எட்டுகிறது. அவ்வெட்டுதல், வீட்டுக்கு அழைக்கிறது. தமிழில் மூழ்குகிறது. பொழுது நீள்கிறது. "நீண்ட நேரம் போக்கினேன்" என்றார் திரு. வி. க. "தமிழுக்கு மணிக்கணக்கு ஏது? என்றார் இரத்தினர்!

தமிழறிந்த அன்பரிடத்தில் பணிசெய்யும் பேறு கிடைத் தமைக்குத் திருவருளை வழுத்துகிறேன்" என்று எழுந்தார் திரு. வி. க.

"யான் தமிழ்ப்புலவனல்லன். ஒரு தமிழ்ப்புலவரை இப்பள்ளி பெற்றமை குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார் தலைவர்?