உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தமிழாசிரியத் தொண்டு

திரு.வி.க. பார்த்த மாதச்சம்பள ஊழியம், வாழ்க்கைக் குறிப்பில் 29 பக்க அளவில் (222-250) இடம் பெற்றுள்ளது. அவ்வூழியத்துள்ளும்நம் ஆய்வுப்பொருளுக்கு ஏற்பத் தமிழூழியம் ஒன்றே இவண் பேசப்படுகின்றது.

திரு. வி. க. வின் வாழ்வே, தமிழ் வாழ்வு! எழுவாய் முதல் இறுவாய் வரை தமிழாக அமைந்த ஒருவரின் தமிழ்த் தொண்டை, வாழ்வாகக்காண்பதன்றி வரைந்து காட்ட இயலுமோ? மாணப்பெரிய மலையின் மாண்பு ஒரு சிறு கற் காட்சியளவில் நின்றுபடுமோ?

கையெழுத்து

யான் லோயர் செகண்டரி சர்டிபிகேட் உடையவன். 'புக்கீப்பிங் சர்டிபிகேட்' உடையவன். எனது கையெழுத்தோ தலை யெழுத்து! எனக்கு என்ன ஊழியம் கிடைக்கும்? ஊழியத்துக்குச் செல்ல மனமெழுவதில்லை. நூல்களை ஆராய்ந்து காலங் கழிக்கவே மனம் விரும்பியது. மனவிருப்பம் நிறைவேறியதா? இல்லை. ஏன்? குடும்பத் தொல்லை பெருகியது",

ஊழியத்திற்குப் போயே தீரவேண்டிய நெருக்கடியால் சென்றாரே அன்றி, உவந்து சென்றார் அல்லர் -என்பது இம் முகப்புரையாலேயே தெள்ளிதின் விளங்கும்.

வேலைதேடிச்செல்கின்ற இடத்தில் பொறுப்பாளர்கள், என்ன படித்திருக்கிறீர்? என்று வினாவினால், அதற்காம் மறு மொழியுடன் இருப்பாரோ திரு.வி.க. இராரே! என் கையெழுத்து நன்றாயிராது என்று கட்டாயம் சொல்லிவிடுவார்! இந்த நெஞ்சத்திற்கு வேலை கிடைக்குமா? கிடைப்பினும் நிலைக்குமா?'

"என்தம்பி தொட்டால் சுருங்கி; அவனுக்கு நல்ல தலைமையாசிரியர் கிடைத்தார்" என்னும் தமையனார் உலகநாதர் உரைகோல், தம்பியார் ஊழிய அளவுகோல்!