உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பல்கலைக்கழகம். வானும் ஞாயிறும் திங்களும் விண்மீனும் கடலும் வயலும் காவும் மலையும் முகிலும் பிறபிறவுமாக விளங்கும் இயற்கைப் பல்கலைக் கழகம்.

தமிழ் இயற்கைமொழி! தமிழ்மொழி இயற்கை நெறிப்பட்ட ஒலியுடையது; சொல்லுடையது; பொருளுடையது. இயற்கை முதுமாந்தன் - அவன் செயற்கைக் கட்டு அறியாக்காலத்து - இயற்கையொடு இயற்கையாக வாழ்ந்த காலத்து அரும்பி மலர்ந்து மணம் பரப்பிய மொழி; அம் மொழியை, இயற்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தினும் சிறந்த எப்பல்கலைக்கழகத்தின் வழி கற்க

முடியும்?

"இயற்கை அன்னை தண்ணருள் பொழிகிறாள். அவள் கோலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவிய ஓவியமாகத் தோன்று கிறது. (இயற்கைக்) கழக மாணாக்கருள் யானும் ஒருவனானேன். அங்கே ஆசிரியன்மாரில்லை, இயற்கைக் கூறு ஒவ்வொன்றும் ஆசிரியத் தொண்டு செய்கிறது. இங்கே பள்ளியில் பலதிறப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அங்கும் பலதிறக்கலைகள் இருக்கின்றன. யான் மாணாக்கன். இயற்கைக் கழகத்தில் பயில்கிறேன். ஏட்டுக் கல்வியை எத்துணைநாள் கட்டி அழுவது? ஏட்டுக்கல்வி என் செய்யும்? ஏட்டளவில் நின்று கொண்டிருக்கும். ஏட்டுக்கல்வி இயற்கைக் கல்வியாதல் வேண்டும். இதற்குரிய எண்ணம் தேவை. எண்ணம் என்ன செய்யாது? எல்லாம் செய்யும். இயற்கைக் கல்வி எவ்வுயிரும் பொதுவென்னும் உணர்வைப் பிறப்பிக்கும்; உணர்வு செயலாகும்; செயல் தொண்டாகும்.

"இயற்கைக்கல்வி என்னைத் தொண்டனாக்கியது; தமிழ்த் தொண்டனாக்கியது".!!

இம் மணிமொழிகள் இயம்புவதென்ன? எங்கெங்கும் கல்வி! என்றென்றும் கல்வி! கல்வி என்பது, கற்பார் நெஞ்சப்பொருள்! அப்பொருளைக் கால இடக்கட்டுக்கு நிறுத்திக் காண்பார், இரங்கத்தக்கவர் - இயற்கைக்கல்வியில் தோயாதவர்-என்பவை யன்றோ உள்ளுறை?

1.வா.கு.96

2.வா.கு.98

3.வா.கு.98.

6.வா.கு.100.

11.வா.கு.126.

7.வா.கு.100

திரு.வி.க.தொ.2

8.வா.கு.101.

4.வா.கு.98.

9.வா.கு.

116.

5.வா.கு.99.

10. வா. கு. 116-7.