உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

தனிமொழி

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

"மக்கள் முதன்முதல் பேசிய மொழியாகிய தமிழைத் தனிமொழி எனக்கூறாது வேறென் கூறுவது?”3

இவ்வொரு தொடரிலேயே முழுக்கருத்தையும் பிழிந்து வைத்துவிடுகிறார் திரு.வி.க. பிறமொழி எதுவும் தலைப் படாமல், மக்கள் முதன்முதல் பேசிய மொழியே தமிழாக இருந்தது எனில் அதனைத் 'தனிமொழி' எனக்கூறாது வேறென் கூறுவது என்பது உணர்ச்சி மிக்க ஒரு வினா! அவ் வினாவிலேயே தனித்தமிழின் அன்மைக்கருத்துத் தகர்ப்படுகின்றது. செய்தி தொடர்கின்றது.

"வடமொழி யொன்றே பயின்று அம்மொழியின் மாட்டுப் பெரும் பற்றுடையராய் வாழும் ஒரு சிலர் தமிழ் தனி மொழியன்று; அது வடமொழியினின்றும் பிறந்தது என்று கூறத் துணிந்தனர். அது கண்ட தமிழ்மக்களுள் வடமொழி ஆராய்ச்சி இல்லாதவர் வடமொழி தமிழினின்றும் பிறந்தது என்னும் கொள்கையை நிறுத்த முயன்றனர். இவ்விரு கூட்டத்தினர் கூற்றையும் இரு மொழியிலும் ஆராய்ச்சியுடைய ஒருவர் ஏற்றுக் கொள்ளார். 'வடமொழியும் தனிமொழியே; தமிழ்மொழியும் தனிமொழியே என்பது எமது கொள்கை.

எழுதப்பட்ட ஆண்டு 1918 என்பதை நினைவு கூர வேண்டும். 'எமது கொள்கை' என்பதையும் கருதவேண்டும். இல்லாக்கால் வடமொழி ஆராய்ச்சி இல்லாதவரால் தனித் தமிழ்க்கொள்கையும், தமிழ் வடமொழிக்கு மூலம் என்னும் கொள்கையும் உருவாக்கப் பட்டது எனக் கூறுவதாகக் கருதி இடர்ப்படநேரும்! மறைமலை யடிகளார் மும்மொழிப் புலமையாளர்; ஞானப்பிரகாச அடிகளார் பன்மொழிப் புலமையாளர்; பாவாணரும் அவ்வாறே பன்மொழிப்புலமையாளர். அதற்குத் திரு.வி.க. தரும் செய்தியே

செய்தி.

“அக்கால மனோநிலை வேறு; இக்கால மனோநிலை வேறு; வேறுபட்ட மனோநிலை கருத்தில் வேற்றுமை யுறுத்துவது இயல்பு"" என்பதே அது.

"ஐங்குறுநூறு கலித்தொகை, பதிற்றுப்பத்து முதலிய தொன்னூல்களை ஆய்ந்த அறிஞர்கள் தமிழ் பிற மொழியின் உதவியால் இயங்குவது என்று கூறத்துணிவார்களோ? திருவள்ளு

வரில் வடசொல் ஒன்றுமில்லாக் குறள்வெண்பாக்கள்