உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

139

நூற்றுக்கணக்காக இருக்கின்றன. பலரும் போற்றும் ஆத்தி சூடியை வாசிப்பின் உண்மை விளங்கும். அதில் வடமொழிக் கலப்பின்றிச் சிறு சிறு கட்டுரைகள் முத்துப்போல் கோக்கப் பட்டிருக்கின்றன. இன்றும் வட மொழிக்கலப்பின்றி எழுது வோரும் பேசுவோரும் இருக்கின்றனர். அன்னார், அந்நடை ஒரு சிலர்க்கே பயன்படுமாகலின் அதைவிடுத்துத் தமிழ்மொழியிற் கலந்து ஆட்சி பெற்ற வடசொற்களை இடையிடையே பெய்து இப்பொழுது எழுதியும் பேசியும் வருகின்றனர். தமிழ்மொழி தனிமொழி என்பதை முற்கால ஆசிரியன்மார்களும் பிற்கால ஆசிரியன்மார்களும் நன்குவிளக்கிக் காட்டியுள்ளார்கள்.

"தமிழ்ப்புலமை நிரம்பப்பெற்று நூல் பல எழுதிவரும் மகாமகோபாத்தியாயர் சாமிநாத ஐயரவர்களும் இராகவ ஐயங்கார் முதலியோரும் தமிழ் தனிமொழி யென்னும் கூற்றை மறுப்பரோ? ஒரு நாளும் மறுக்கத் துணியார், தமிழின் மூலை கண்டறியா ஒரு சிலரே அதைக் குறை கூறத்துணிவர். காலஞ் சென்ற சூரிய நாராயணசாஸ்திரியார் எழுதிய தமிழ்மொழி வரலாறு என்னும் சீரிய நூலைத் தமிழின் எழுத்திலக்கணமும் தெரியாது 'தமிழ் தனிமொழியன்று' என்று கூறும் அறிஞர்கள், வாசித்து உண்மை காண்பார்களாக.

"தனித்தியங்கும் ஆற்றலுடைய தமிழ்மொழியை நமது சென்னைச் சர்வகலாசாலையார் எங்ஙனம் வளர்த்து வருகின்றனர் என்பதைச் சிறிது ஆராய்ச்சி செய்வோம். சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர்த் தமிழ், பி.ஏ. வகுப்பு வரை கட்டாயப் பாடமாக இருந்தது.தமிழொன்றே யெடுத்து எம்.ஏ. பரீட்சையில் தேறினரும் பலர் இருக்கின்றனர். அங்ஙனம் தமிழை வளர்த்து வந்த சர்வகலா சாலையார் சில போலிக் காரணங்களை முன்னிட்டுத் தமிழை இஷ்டபாடமாக மாற்றி விட்டனர். சர்வகலாசாலை அங்கத் தலைவர்களில் பலர் தமிழ் இன்னதென்றே தெரியாதவர். ஒரு சிலரே தமிழாராய்ச்சி யுடையவர். தமிழ்மொழியைப் பற்றி அடிக்கடி சர்வகலா சாலையில் விவாதம் நிகழ்கிறது., அவ்வக் காலங்களில் தமிழ்ச் சொல் காதிலும் கேட்டறியாத சிலர் தமிழைப்பற்றி அபிப்ராயங்கூறத் தொடங்குகின்றனர். தமிழா ராய்ச்சி யுடையார் வாக்குச் சர்வகலாசாலை அரங்க மேறுவ தில்லை. சில காலத்தில் தமிழங்கத்தினர் மௌன விரதம் பூண் கின்றனர்.சர்வகலாசாலை இன்னும் தமிழ் மொழியைத் தனிமொழி என உணர்ந்ததோ இல்லையோ என்பது சந்தேகம்.”