உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

"சென்னைச் சர்வகலாசாலையில் வித்துவான் பரீட்சை யென்று ஒன்று ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப் பரீட்சைக்குச் செல்வோர் வடமொழி பயிலல் வேண்டும். தமிழ் மக்களுள் பலர் வடமொழிப் பயிற்சி செய்வதில்லை. சிலர் வடமொழியை உச்சரிக்கவே வருந்துவர். எத்தனையோ தமிழ் மக்கள் வித்துவான் பரீட்சைக்குச் செல்ல விரும்புகின்றார்கள். ஆனால், அவர்கள் தமிழல்லாப் பிறமொழிகளைப் பயிலல் வேண்டும் என்னும் நியதிக்கு அஞ்சித் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யாமல் இருக்கிறார்கள்.

(4

"இதைக் குறித்துச் சென்றவாரம் சர்வகலாசாலையில் பெரும் விவாதம் நடந்தது... அதுகாலை நீதிபதி சேஷகிரி ஐயரவர் களும், ஸ்ரீமான் சி.பி. இராமசாமி ஐயரவர்களும் தமிழ் உண்மை கண்டு பேசியதற்குப் பெரிதும் நன்றி யறிதலுடையோம்.

"தெலுங்கு முதலிய திராவிட பாஷைகளைப் பயில்வோர்க்கு வடமொழி ஞானம் அவசியம் வேண்டுமென்பதை மறுப்பாரில்லை. தமிழ்ப் பரீட்சைக்குச் செல்வோர்க்கு வடமொழிப் பாடம் பெருந் தடையாக நிற்கிறது என்பதையே ஈண்டு நம் சர்வகலாசாலை யாருக்கு அறிவுறுத்துகிறோம்.

"தமிழ்மக்கள் இனி உறங்கலாகாது; வேறுவித வேற்றுமை களைப் பாஷா விஷயத்தில் பாராட்டலாகாது. ஒற்றுமை உழைப் பிற்குப் பயனுண்டு. தமிழ் தனிமொழி என்பதைச் சர்வகலா சாலையார்க்கு நியாய வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி வாயிலாக அறிவுறுத்த வேண்டுவது நமது முதற்பெருங்கடமை. இக்காரியத்தில் பிராமணரும் பிராமணரல்லாதாரும் ஒன்றுகூடி உழைப்பாரென நம்புகிறோம்'s

ஆசிரியவுரை

தமிழ் ஒரு வட்டாரமொழியென்றும், அது உயர் தனிச் செம்மொழியன்று என்றும், தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் கட்டாயம் கற்பிக்கத் தகுதியுடையதன்று என்றும், விருப்பப் பாடமாக இருப்பின் விரும்புவார் கற்றுக்கொள்வர் என்றும், அது கட்டாயப் பாடமாக இருப்பின் வடமொழியை இழிவு படுத்துவதாய் அமையும் என்றும், ஆங்கிலமும் வடமொழியுமே கட்டாய மொழிப்பாடங்களாக இருத்தல் வேண்டும் என்றும் படித்தறிந்த சூழ்ச்சியாளர் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில்