உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

141

வலியுறுத்தினர். வெற்றியும் கண்டனர். அந்நிலையில் எழுதப்பட்ட ஆசிரியவுரைக் கட்டுரை இது. 'சில போலிக் காரணங்களை முன்னிட்டு' என்று திரு. வி. க. கூறுவதில் மறைந்துள்ள செய்திகள்

வை. 1902ஆம் ஆண்டில் ஏற்பட்ட இத்தகு நிலைமையைப் பரிதிமாற்கலைஞர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, பொ. பாண்டித்துரைத்தேவர் ஆகியோர் தலைப்பட்டு நிறுத்திய செய்தி ஒன்றுண்மையும் அறியத்தக்கது.6

தமிழாசிரியர் நிலை

தமிழாக்கம் பற்றிய கருத்தளவில் தேசபக்தன் நில்லானாகத் தமிழாசிரியரைப் பற்றியும் எண்ணினான். "வரவரத் தமிழ்ப் புலவர்கள் மாண்பிழந்து இயற்கை நுண்ணறிவும் மங்கப்பெற்று, வறுமைக்கும் சிறுமைக்கும் ஆளாகி வருகின்றார்கள். பல தமிழ்ப் பண்டிதர்களுக்குப் பண்டைத் தமிழ் நூல்கள் வேறுமொழி நூல்களாகத் தோன்றுகின்றன. அவர்கட்கு இயற்கையின்பம் தெரியாமல் போய்விட்டது. இதுகாலை ஒரு சிலரே சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவரையும் வறுமை சிறுமைப்படுத்தி வருகின்றது. என்செய்வர்? பாவம்!" என இரங்கினார்."

தேசபக்தனிலிருந்து விலகிய திரு.வி.க. வைத் தொழிலாளர் பேரன்பே நவசக்தியைத் தொடங்கத் தூண்டியது. எப்படி? விரும்பும் தொழிலாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உருபாய் தரலாம் எனத் தோழர் சிலர் திட்டமிட்டனர். அதனால் ஐயாயிரமும் ஈராயிரமுமாய் ஏழாயிரம் திரண்டது! ஏழாயிரவர் உணர்வு கூடின் என்ன தான் நிகழாது. நவசக்தி கிளர்ந்தாள். அதன் முதற் சிலம்பின் முதற் பரல் 22-10-1920 இல் வெளி வந்தது. ருபது சிலம்புகள் தொடர்ந்து வெளிவந்தன.

நவசக்தி

நவசக்தி வாரம் மும்முறைப் பதிப்பாக வெளிவந்தது. நாட்பதிப்பாக்கப் பலர் வலியுறுத்தினர். திரு. வி.க. உடன்பட்டார் இலர்; திங்களிதழாகவும், கிழமை இதழாகவுடம்கூட வெளிவர நேர்ந்தது. 1941 சனவரியில் இராதாமணி அம்மையார் என்பார் பொறுப்பில் இதழ் விடப்பட்டது. அவர், தாம் ஆர்வத்துடன் நவசக்தியை வளர்ப்பதாக ஏற்றுக்கொண்டார். “காலஞ்சென்ற நம் குழந்தை திலகவதி மீண்டும் வரதையரிடத்தில் பிறந்து இவ்வாறு பேசகிறதோ!"8 என்று கருதி வாழ்த்து வழங்கினார் திரு. வி. க.