உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

143

"இப்பொழுது சில தலைவர்கள் கட்டுரைகளை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னைத் தமிழில் மொழி பெயர்க்கும் வழக்கத்தை ஏற்று வருகிறார்கள். அதுவும் கூடாது. தமிழிலேயே முதலில் கட்டுரைகளை எழுதப் பழகல் வேண்டும். கருத்தும் சொல்லும் செயலும் தமிழ் மயமாக இருத்தல் வேண்டும். பிற கருத்தும் பிற சொல்லும் பிறசெயலும் தேசப்பற்றை வளர்க்க மாட்டா. ஆகவே, முதலில் தமிழ்மொழியை வளர்க்கத் தேச பக்தர்கள் முயலல் வேண்டும்.23

தமிழ்நாடு

'நமது நாட்டை நம் முன்னோர்கள் தமிழ்நாடு என்றார்கள். அத் தமிழ்நாடு இப்பொழுது எங்கே என்று நாம் வினவுகிறோம். நிலப்பரப்பு இருக்கிறது. தமிழ்மக்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைக் காணோம். முற்றிலுங் காணோம் என்று கூறத் துணிகிறோமில்லை. தமிழ்நாடு சிறிது புலனாகிக்கொண்டே யிருக்கிறது. தமிழ்நாடு சிறிது புலனாகிக்கொண்டேயிருக்கிறது. தமிழ்நாடு தமிழ்நூல்களில் உறங்கிக்கொண்டிருப்பதைக் காண் கிறோம். தமிழ்நாடு தமிழ்மக்களிடைப் பெரிதும் தவழ்வதைக் காண்கிறோமில்லை,24

தமிழ்நிலை குன்றல்

"தமிழ்மொழியின் நிலை குன்றி வருவதற்குரிய காரணங் களைப் பலவாறு கூறுப. நாம் மூன்று காரணங்களைச் சிறப்பாகக் கூறுவோம். ஒன்று, நாடு உரிமை இழந்திருப்பது; மற்றொன்று தமிழ்ப்புலவர்கள் புதுமையைக்கண்டு மருள்வது; இன்னொன்று ஆங்கிலம் பயிலும் தமிழ்மக்களின் கவலையீனம். 25

(ஆங்கிலம் பயின்ற) "கூட்டத்தார் நினைவெழும் போதே, நமது உள்ளம் கனன்று கனன்று கொதிக்கிறது. நமது நாட்டைக் கொலை செய்தவர் - செய்கிறவர் - இவரேயாவர்... தாய்மொழியில் பேசுவதையும் எழுதுவதையும் இழிவெனக் கருதும் இக்கூட்டத் தாராலன்றோ நமது நாடு இந்நிலைக்கு வந்திருக்கிறது.'இப் பெரியோர்கள்' தமிழில் என்ன இருக்கிறது; சரியான இலக்கியங் களில்லை; நாடகங்களில்லை; என்று குறை கூறுவார்கள் குறை கூறும் 'இக்கல்வியாளர்கள்' ஏன் குறையொழியத் தாங்கள் முன் வருவதில்லை?"26