உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

"காந்தியடிகள், பரதகண்டத்தைப் பாஷை வாரியாகப் பிரித்திருக்கிறார், அவர் நோக்கம் என்னை? அவ்வம் மொழி வளம்பெற வேண்டும் என்பதே. பரதகண்டத்தின் பல பகுதியினர் தத்தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். ஆனால் தமிழ்ப் பிள்ளைகள் தம்மொழியைக் கனவிலும் கருதுகிறார் களில்லை. கனவிலாவது கருதினால் தமிழ் நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர் நிறுவுவார்களோ? நாடு எதுவோ? மாகாணம் எதுவோ? தெரியவில்லை. தமிழ்மொழியில் வெளிவரும் பத்திரிகைகள் அதைக் கவனிக்கின்றனவோ? இதைப்பற்றி நம்மிடமிருந்து எழுந்த கூக்குரல் லோகோபகாரிக்குக் கேட்டது. மற்றவைகட்கோ.”

நாட்டுக்கல்லூரி

"நாட்டுக்கல்லூரி ஒன்று ஏற்படுத்தத் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் ஏன் முயற்சி செய்யலாகாது? நாட்டுக்கல்வி நாட்டுக்கல்வி என்று பேசிப்பேசி மேல் நாட்டுக் கல்விக்குத் துணை போகலாமோ? நாட்டுக் கல்லூரியொன்று ஏற்பாடு செய்து அதன் கண் தமிழ்வாயிலாக எல்லாப் பாடங்களையும் போதிக்க முயலல் வேண்டும். இதனால் பண்டைத் தமிழும்வேறு பல நாட்டின் கூட்டுறவும் ஒன்றிய தமிழ்நாடு மிகவளமாக அரும்பும். அந்நாடு சுயராஜ்ஜியத் தமிழ் நாடாகும்.28'

மணிமணியான கருத்துகளைச் செறித்த இவ் வளநடை வ்வளவில் அமைக. 'தாய்மொழி' எனத்திகழும் ஒரே ஒரு கட்டுரை திரு.வி.க. வின் 'தமிழ்நோக்கை' ஓவியக் காட்சியாகக் காட்டுகின்றது, அக்கட்டுரையில் விட்டுச் செல்ல அல்லது விட்டுச் சொல்ல ஒரு சொல்தானும் இல்லை; அதனை அப்படியே பொறிப்போம்:

தாய்மொழி

"ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் 'தாய்தாய்' “தாய்” என்று போற்று கிறான். ஒருவனுக்குத் தன்னைப் பெற்ற தாயின்பால் எத்தகை அன்புண்டோ அத்தகை அன்பு, அவனை அளித்த நாட்டினிடத்தும் அவனை வளர்க்கும் மொழியினிடத்தும் அவனுக்கு இருத்தல் வேண்டும். நாட்டையும் மொழியையும் நேசியாதவன், பெற்ற தாயையும் நேசியாத பாவியாவான். பெற்ற தாயின் அன்புக்கும்