உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

145

பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே யாகும். பேசுந் தாய் மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.

தமிழ் மொழியின் நிலைமை

"இப்பொழுது நமது தாய்மொழியாகிய தமிழ்மொழி எந்நிலையுற்றிருக்கிறது? தமிழ்த்தாய் யாண்டு உறைகிறாள்? அரசாங்கத்தில் வீற்றிருக்கிறாளா? மன்றங்களில் வதிகிறாளா? சட்டசபைகளில் வாழ்கிறாளா? கல்லூரிகள் எனப்படும் நிலையங் களிலாதல் அவளைப் பார்க்கலாமா? உரிமைக்கு உழைப்பதாகச் சொல்லப்படும் அரசியல் கழகங்களிலாதல் அவளைக் காணலாமா? தமிழ்ப்பத்திரிகைகளிலாதல் அவளுக்கு இடமுண்டா? பல பத்திரிக்கைகள் தமிழ்த் தாயின் சிகையை - கழுத்தை - இடுப்பை - கொய்யும் இறுவாளாகவும், அறுக்கும் கொடுவாளாகவும், உடைக்கும் தண்டமாகவும் அல்லவோ உலவுகின்றன? அப் பத்திரிகைகளுக்கேற்ற நூல்களும் வெளிவருகின்றன. சுருங்கக்கூறின் தமிழ்மக்கள் தாய்மொழியைக் கொலை செய்வதில் பேரும் புகழும் பெற்றவர்களென்று கூறலாம்.

"சிலர் சிற்சில இடங்களில் 'தமிழ்' 'தமிழ்' என்று கண்ணீர் விடுகிறார். அவருள் சிலர் தமிழுக்கு ஆக்கந் தேடுவது போல், அதற்கு அழிவு தேடி வருகிறார். தமிழ்த் தாய் நானா பக்கங்களிலும் தாக்கப்பட்டு வலியிழந்து வீழ்ந்து கிடக்கிறார். ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி அவதியுறு நிலையை நந்தாய் அடைந்திருக் கிறாள். தமிழ் வேந்தர்கள் காலத்தில் கன்னி (என்னும் அழியாதவள்) என்னும் பெயர் தாங்கிய நம் அன்னை, இக்காலத்தில் இறந்து படுவாளோ என்னும் ஐயமும் நிகழ்கிறது."

இரண்டகம்

"நாட்டில் செல்வாக்குப் பெற்றிருப்பவர் பெரிதும் ஆங்கிலம் கற்றவர். அன்னார் பேச்சுக்கும் எழுத்துக்கும், நாடும் மதிப்புக் கொடுக்கிறது. அவருள் பெரும்பான்மையோர் தம்மைத் தமிழர் என்பதை மறந்திருப்பவர். சிலருக்கு மட்டும் தமிழ் நினைவு உண்டு. இவர் எழுதும் தமிழே பிள்ளைத் தமிழ்மொழி இலக்கியங்களாக நிலவும். இவர் என் செய்வர்? இவருக்குப் போதிய தமிழ்ப்புலமை இல்லை. ஆங்கிலப் புலமையிருக்கிறது. இவர்களால் எழுதப்படும் நூல்கள் பல இதுகாலை வெளிவருகின்றன. அவைகளின் கருத்து,