உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

.

153

'அரசியல்' 'அரசு' 'அரசன்' என்னும் சொற்களின் மூலம் அர் என்பதே. 'அர்' என்பது செம்மைப்பொருளின் அடிச்சொல்! ஆகலின் அரசு என்பதே 'செங்கோல்' என்பதைக் காட்டும் சால்புச் சொல்லேயாம். அருள் என்பதும் 'அர்' வழி வந்ததே. அருள்தானே செந்தண்மையாம் அந்தண்மை!

செம்மைக்குரிய அரசு, கொடுமைக்குரிய நிலையில் கொடுங் கோல் ஆயிற்று."வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலோடு நின்றான் இரவு" என்னும் குறள் கொடுங்கோன்மை விளக்கமாம்.'

நாட்டவர் அரசே நயனிலார் வழிப்படின், கொடுங் கோலரசாம் எனின், வேற்றவர் அரசியலில் விழுப்பத்தை நோக்க முடியுமோ? அந்நிலையிலேயே அரசியல் கிளர்ச்சியும், புரட்சியும் கட்டாயம் எழவேண்டியவாயினவாம்.

மேடைத்தமிழ்

திரு.வி.க.தம் அரசியல் தொண்டைச் சுட்டுகிறார்.

64

சுயராஜ்ய சேவையினூடே, தமிழ்நாட்டார் பற்பல மகாநாடுகளில் தலைமைவகிக்கும் பணியையும் அடியேனுக்கு வழங்கியதுண்டு. மகாநாடுகளில் தலைமை வகிப்பேர் தமது முதலுரையைச் சமயத்துக்கேற்றவாறு சில இடங்களில் பேசி விடுவது வழக்கம். சில இடங்களில் எழுதிப்படிப்பது வழக்கம். இவை முறையே இக்கால வழக்கில் வாய்ப்பேச்சு, எழுத்துப்பேச்சு (Written Speech) என்னப்படும். இவ்விரு வழியிலும் அடியேன் கடனாற்றியிருக்கின்றேன்.”

அரசியல் பொழிவை ஆங்கிலத்தில் நிகழ்த்துவதற்கும் தமிழில் நிகழ்த்துவதற்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகக் கண்டவர் திரு.வி.க. தமிழில் நிகழ்த்துவதன் சிக்கலைப் பெரிதும் உணர்ந்தவர்; அதனால் இடரும் பட்டவர். ஆகவே அவ்விடர் அகல்வதற்காக ஆக்கமான ஒரு வழியைக் குறிப்பிடுகிறார். அது தமிழில் சுருக்கெழுத்துப்பயிற்சி பெருக வேண்டும் என்பதாம். சுருக்கெழுத்து

"தமிழ்நாட்டில் தாய்மொழிவாயிலாக நிகழ்த்தப் பெறும் வாய்ப்பேச்சுக்கு உள்ள அல்லல் வேறு எதற்கும் இல்லை என்று கூறலாம். அல்லலுக்குக் காரணம், தமிழ்மொழியில் சுருக்கெழுத்துப்