உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பயிற்சி இன்னும் முற்றும் வளம் பெறாமையேயாகும். தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் தமிழ்ச்சுருக்கெழுத்துப் பயில்வதில் கவலை செலுத்துகிறார்களில்லை. அப்பயிற்சி பெரிதும் இப் பொழுது போலீசார்க்கு உரிமைப்பெருளாயிருந்து வருகிறது. போலீசார் அல்லாத இரண்டொருவர் தமிழ்ச்சுருக்கெழுத்தில் பயிற்சி பெற்றிருத்தல் எனக்குத் தெரியும். அவர்க்குப் போதிய தமிழ்ப்புலமை இன்மையால், அவர் இடர்ப்படுவதையும் யான் கண்டிருக்கிறேன்: தமிழ்ப் புலமையுடன் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயின்றோர் வேறு சிலர் இருக்கிறாரோ என்னவோ யான் அறியேன். தமிழ்ப்புலமை யுடையார் தமிழ்ச்சுருக்கெழுத்துப் பயின்று தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்வது நலம்.4"

தமிழ்த்தென்றல்

மாநாடுகளில் நிகழ்த்தப்பெற்ற எழுத்துரைகளின் தொகுப்பே தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு என்னும் பெயரால் 1928 இல் வெளிவந்தது. அத்தலைப்பே திரு.வி.க. வைக் குறிப்பதாகத் தமிழர்களால் கொள்ளப்பட்டது. அவர் வாழ்ந்த நாளிலேயே நூற்றலைப்புச் சூட்டுங்காலையிலேயே - திரு.வி.க. ‘தமிழ்த் தென்றல்' எனச் சிலரால் எண்ணவும் எழுதவும் சொல்லவும் பெற்றிருப்பார்போலும். அச்செய்தி நூன் முகப்பிலே வரும் அணிந்துரை வழியே குறிப்பாக அறியக் கிடக்கிறது.

<<

"என்னுரையில் தமிழ்த்தென்றல் வீசுவதாக எவரும் கொள்ள வேண்டுவதில்லை. தமிழ்த்தென்றல் எங்கே? ஏழையேன் எங்கே? ஆனால் தமிழ்த்தென்றலில் மூழ்கும் வேட்கை மட்டும் எனக்கு உண்டு.

"தமிழ்த்தென்றல் என்னும் பெயர் எனது தமிழ் நடையைக் குறிக்கொண்டு நிற்பதன்று என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழ்த்தென்றலுக்கு நிலைக்களனாயிலங்கும் நமது நாட்டின் பண்டைவளம், கல்வி, அறம், அரசு, வழக்கவொழுக்கம் முதலிய வற்றை மக்கட்கு நினைவூட்டி, இப்பொழுது இன்றியமையாது வேண்டற்பாலதாய உரிமை வேட்கையை அவர்களிடை எழுப்ப வேண்டும் என்பது எனது நோக்கம். அதற்கு அடிப்படை தாய்மொழி என்பது எனது உட்கிடை அன்பர்கள் நெஞ்சில் தாய் மொழி நினைவு நிலைபெறுதல் வேண்டும் என்னுங் கருத்துடன் 'தமிழ்த் தென்றல்' என்னும் முடியை இந்நூலுக்கு அணிந்தேன். தமிழ்த்தென்றலுக்குரிய நாட்டின் உரிமை குறிக்கும் ஒருநூலென இதைக்கொள்க. ஈண்டுத் தென்றல் ஆகுபெயர்"