உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மாநாடு

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

155

1925 நவம்பர் 21,22 ஆம் நாள்களில் காஞ்சியில் தமிழ்மாகாண காங்கரஸ் சார்பில் 31 ஆவது தமிழர் மகாநாடு நிகழ்ந்தது. அந் நிகழ்ச்சி பற்றிய கட்டுரை 69 பக்க அளவில் நீண்டது. அதன் எழுவாய் முதல் 25 பக்கங்கள் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழிலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு என்பவை பற்றியவாம். தமிழிசை பற்றிய திரு.வி.க.வின் கருத்துகள் 3 ஆம் தமிழிசை மாநாட்டுத் திறப்பு மொழியாக (23.12.1945) வெளிப்பட்டுளது. இவ்விரண்டு கட்டுரைகளிலிருந்தும் சிலச்சில கருத்துகளை அகழ்ந்து இவண் பெய்யப்படுகிறது.

தமிழர் தொன்மை

"இப்பொழுதுள்ள இந்துமகாசமுத்திரம் என்னும் பெரு நீர்ப்பரப்பு, நிலப்பரப்பாயிருந்ததென்றும், ஆண்டே மக்கள் தோற்றம் முதன்முதல் உற்றதென்றும் அந்நிலம் பின்னைக் கடலால் விழுங்கப்பட்டதென்றும் ஆசிரியர் எர்னஸ்ட் ஹெக்கல், ஸ்காட் எலியட் உள்ளிட்ட அறிஞர் பலர் தமது ஆராய்ச்சியில் கண்ட உண்மையை உலகுக்கு உணர்த்தியிருக்கின்றனர்""

"நாடு என்பது வெறும் மண்ணைமட்டும் குறிப்பதன்று என்பதும் அம் மண்ணில் வாழ்மாந்தரது வழக்க ஒழுக்கம் முதலியன கொண்ட ஒன்றென்பதும் கருத்தில் இருத்தத்தக்கன.?

"தமிழ் என்பதற்கு இனிமை" என்பது பொருள். தமிழ் தழீஇய சாயலவர் என்றும் தமிழ்சேர்காஞ்சி என்றும் புலவர் 'இனிமை' என்னும் பொருள்படத் 'தமிழ்' என்னுஞ் சொல்லை ஆண்டிருத்தல் காண்க. பழமை மக்கள் இயற்கையிலூறும் தமிழையே பின்னைத் தாங்கள், அவ்வியற்கைப் பொருளுக்கிட்ட சொன்மொழிக்கும் வழங்கினர் போலும்.'8

"நம் மக்கள் வாழ்வே தமிழ் வாழ்வு. அவர்கள் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்த்தது தமிழ்; உற்றது தமிழ்; அத்தமிழ் அமிழ்தங்கொண்ட நாடு இந்நாடு ஆ! ஆ! இது நினைவிலுறும்போது உறும் இன்பத்தை என்னென்பேன்! என்னென்பேன்!?

இன்பத் தமிழ்நாட்டிற் பிறந்தநாம் இதுபோழ்து தமிழின்பம் நுகர்கிறோமா? இல்லையே; காரணமென்ன? உரிமை இழந்தோம்;