உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழை மறந்தோம்; மீண்டும் உரிமை உணர்வு பெற யாண்டுப் போதல் வேண்டும்? தமிழ்த்தாயிடம் செல்வோமாக; அவள் சேவையால் உரிமையுணர்வு பெறலாம். தமிழ்மக்களே; சேவைக்கு எழுங்கள்; எழுங்கள்;" தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அரசு, பிறப்பொப்பு, பெண்மக்கள்; இவற்றை விளக்கிய திரு.வி.க. இறைமை இயற்கையை வடிக்கிறார்.

இறைமை

அவர்கள் (தமிழர்கள்) கடவுளைக் 'கந்தழி' என்னும் பெயரால் வழுத்தினார்கள். கட்டற்ற ஒன்று 'கந்தழி' என்பது. அழுக்காறு அவா வெகுளி முதலிய கட்டுகள் கடந்து விளங்கும்

ன்ப அன்பே கந்தழி என்னுங்கடவுள். "ஈறிலாப்பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே" என்று L பின்வந்த தமிழ்நாட்டன்பர், மணிவாசகனார் - அருளியிருத்தலை நோக்குக. அவர், கடவுளை 'இன்பமே' என்றும் 'அன்பே' என்றும் விளித்திருத்தலை ஓர்க.

"அன்புக் கடவுள் யாண்டில்லை? இயற்கையெல்லாம் அன்புக்கடவுள் வடிவல்லவோ? இயற்கையினின்றும் திரண் டெழுந்த அன்புக் கொழுந்தன்றோ நம் பெண்ணமிழ்தம்? இப் பெண்ணமிழ்தமா காமப்பொருள்? கொடுமை! கொடுமை! மாசுபடர்ந்த மனத்துக்கன்றோ பெண்ணெனும் பெருமை காமப் பொருள்? மாசிலா மனத்தார்க்குப் பெண்ணெனும் பெருமை காதற்கடவுளல்லவோ? பெண்ணோடு கூடி வாழும் வாழ்வன்றோ இயற்கை வடிவான இறையன்பைக் கூட்டும் வாழ்வாகும்? இயற்கையை விடுத்து, இறைவனை எவ்வாறு காண்டல் முடியும்?"

கலைகள்

இனித் தமிழிலக்கியம், தமிழிசை, தமிழ்மருத்துவம், வானியலாய்வு, ஓவியம், தொழில் இன்னவற்றையெல்லாம் விரித் துரைக்கிறார்:

"நெடுநிலை மாடத்து இடைநிலத் திருந்துழி" என்றும் 'நிரைநிலைமாடத் தரமியம் ஏறி' என்றும் 'வேயா மாடமும்' என்றும், 'மான்கண்காலதர் மாளிகை இடங்களும்' என்றும் இளங்கோவடிகள் தமிழ் மக்களின் கட்டடங்களைச் சிறப்பித் திருக்கிறார்.2