உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

157

"பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டுநுண்வினை கண்டவர்கள் நந்தமிழ்மக்கள்; கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கியவர்கள் நம் தமிழ்மக்கள்; பாலாவியன்ன மிக மெல்லிய ஆடை நெய்தவர்கள் நம் தமிழ்மக்கள் என அடுக்குகிறார்.13 ஒருமைப்பாடு

"இத்துணைச் சிறப்பு வாய்ந்த நம் மருமைத் தமிழ் நாடெங்கே? தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கமெங்கே? அன்பெங்கே? அரசெங்கே? வீரத்தாய்மாரெங்கே? தமிழ்த் தாயெங்கே? தமிழர்களே! உங்கள் தொன்மை என்ன? உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை என்ன? உங்களுக்குள் இதுபோது எத்துணைப் பிளவு? எத்துணைப் பிரிவு? நந்தமிழ்த்தாய், கால்வேறு-கைவேறு தலைவேறு வேறுவேறாகக் கூறுபட்டுக்கிடப்பதைக் காண உங்கட்குக் கண்ணி ல்லையா? நினைக்க மனமில்லையா? மீண்டும் நீங்கள் பண்டை நிலை எய்த வேண்டாமா? வேண்டுமேல் பழந்தமிழ்நூல்களை ஆராய்ந்து உண்மைத் தமிழ்நாட்டைக் காண எழுங்கள்! எழுங்கள்!*”

-

www

"இத்தமிழ் நரட்டவராகிய நாம், பலப்பல சாதியினராய்ப் பலப்பல சமயத்தவராய்ப் பிரிந்து பிளவுபட்டுக் கிடக்கின்றோமே; ஒருமைப்பாட்டுக்கு வழியும் உண்டோ என்று சிலர் வினவலாம். சிலர்கருதலாம் சாதிசமய வேறுபாடுகளைக் கடந்துநின்று நம்மனைவரையும் ஒருமைப்படுத்தி நிற்பது ஒன்றுளது. அதன்மீது நாம் கவலை செலுத்துவமேல் அது வேறுபாடுகளை வீழ்த்தி ஒருமைப்பாட்டை உண்டு பண்ணும். அஃது எது? அதுவே நமது அருமைத்தமிழ்”'

64

'சமய வேற்றுமை, கடைச்சங்கப்புலவர் காலத்திலேயே தலைகாட்டிற்று. அன்னார் சமய வழிபாட்டில் பன்மைப் பட்டு நின்றும், தமிழை வளர்ப்பதில் ஒருமைப்பட்டு நின்றமையான், இவ்வொருமை அப் பன்மையை விழுங்கி, நாட்டை ஓம்பியதை ஆராய்ந்து உண்மைகண்டு ஒருமைப் படுவோமாக. ஆதலால், நம்மை ஒருமைப்படுத்தவல்ல தமிழை வளர்க்க முயல்வோமாக." தமிழிசை

இனித்தமிழிசை பற்றிய சில குறிப்புகளைக் காணலாம். 'பரிபாடல்' இசைவகுத்துப் பண்ணமைத்துப் பாடப்பெற்றது, பெருந்தேவபாணி, தேவபாணி என்பவை தெய்வம் பராய பாடல்கள். தமிழிசைச்சீர்த்தியைத் 'திருவிசைப்பா' என்னும் பெயரே