உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

காட்டப் போதுமன்றோ! தேவாரம். திருவாசகம், நாலாயிரப் பனுவல்,திருப்புகழ் இன்னவையெல்லாம் தோன்றிக் கவின் செய்யும் ஒரு மொழியில் இசை இல்லை என்னலாமோ? 'என் தாய் மலடி' என்று ஒரு மடவன் அல்லது வெறியன் கூறுவதற்கும், தமிழிசையென ஒன்றில்லை என்று கூறுவதற்கும் வேறு பாடில்லையாம். சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லார் உரையொடு பார்த்தவரும், சேக்கிழார் தொண்டர்மாக்கதை கண்டவரும் தமிழிசையென ஒன்று இல்லை என்று நெஞ்சாலும் நினைவரோ? என்செய்வது? நினைவாரும் உளர்! சொல்வாரும் உளர்! வெறிகூர்ந்து தமிழிசை இல்லெனப் பழிப்பாரும் இசைக் கல்லூரிப் பெருமக்களாக உலா வருகின்றனர். 'இல்லென்பார்க்கே உண்டெனத் தந்த' பொறுப்பு, என்னென்ன எதிரிடை வேலை களைச் செய்யா? இந்நிலையிலே தமிழிசை இயக்கம் என ஓரியக்கம் தோன்றுதலும் தமிழிசையை நிலைபெறுத்துதலும் கட்டாயத் தேவையாயிற்று. அவ்வாறு தோன்றியதே சென்னைத் தமிழிசைச் சங்கமாம். அதன் மூன்றாம் விழாவின் திறப்பு மொழியில் திரு.வி.க. கூறிய இசைக்கருத்துகள் சிலவற்றை இவண் இசைக்கலாம்.

"இசை, நுண்மை; உயிர். இதன் விளக்கத்துக்கு ஒரு பருமை உடல் தேவையன்றோ? அப் பருமை உடலே மொழி என்பது மொழி எனில் எம்மொழி? அவ்வந்நாட்டில் இயற்கையாக அமைந்துள்ள தாய்மொழி என்க.

17""

நாம் தமிழர்.நாம் எம்மொழியில் இசையைப்பாடுதல் வேண்டும்? தமிழ்மொழியில் என்று சொல்லலும் வேண்டுமோ? தமிழனுக்குத் தமிழ்ப்பாட்டே சுவைக்கும். மற்ற மற்றவர்க்கு அவரவர் மொழிப்பாட்டே சுவைக்கும். இஃது இயற்கை, இசையில் மொழிப்போரை நுழைப்பது அநாகரிகம். பகைமையைப் போக்க எழுந்த ஒரு கலையினிடைப்பகைமையைப் புகுத்துவது அறியாமை."

"தமிழ் இனிமை; இசையும் இனிமை; இரண்டினிமையும் ஒன்றுபட்டால் எத்தகைய இன்பம் சுரக்கும்! தமிழிசையின் மாண்பு என்னே! என்னே! தமிழர் திருவே திரு!'

"தமிழிசை தொன்மை வாய்ந்தது; மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்விசை எந்நாளில் தோன்றியது, வளர்ந்தது, முதிர்ந்தது என்று அறுதியிட்டுக்கூறல் இயலவில்லை. அது சரித்திரகாலத்தையுங் கடந்து நிற்பது. பலநாட்டவர் இசைநுட்பம் இன்னதென்று தெரியாது திரிந்த காலத்தில், தமிழ்நாட்டவர் இசை நுட்பத்தைச்