உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

159

செவ்வனே தெளிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் பலபடக் கிடக்கின்றன.

தமிழர் கோயில்களும், மறைகளும், காவியங்களும், ஓவியங் களும் பிறவும் எடுத்துக்காட்டுகளாக இலங்குகின்றன. 'தமிழ்நாடே ஓர் இசை நிலையம்' என்று சுருங்கச் சொல்லலாம்.'8 (இசை) மன்றங்கள் வெறும் விளம்பரக் கூடங்களாதல் கூடாது. அவற்றில் ஆவேசம், வெறி, வகுப்புப் பிணக்கு, மொழிப்பூசல், கட்சிப்போர் முதலிய பேய்கள் நடம்புரிதலாகாது. பேய்க்கூத்தால் இசை ஆக்கம் பெறாது; வசையே ஆக்கம் பெறும்.

"சில மன்றங்கள் திங்கட்கொருமுறை விழித்து இசைவிருந் துண்டு தூங்கிவிடுகின்றன. சில ஆண்டுக் கொருமுறை விழித்து விழாநிகழ்த்தி உறங்கிவிடுகின்றன; சில கும்பகர்ணனுக்குத் துணை போகின்றன. சோம்பல் ஒழிக; சுறுசுறுப்பு எழுக.

"ஒவ்வொரு மன்றமும் இசைப்பயிற்சிப் பள்ளியாதல் விழுப்பம்; பிரகாரக்கழகமாதல் சிறப்பு; நூல்வெளியீட்டு நிலைய மாதல் நல்லது; மன்றச் சார்பில் பந்தாட்டம் முதலியன நடை பெறலாம்; கலை ஆராய்ச்சிகள் நிகழலாம்; புதுமை காணவும் முயலலாம்."

தேவாரம் நாலாயிரப்பனுவல்

"திருஞானசம்பந்தர், இறைவனை, இயல்-இசை,நாடக மாக்கித் தமிழில் தந்த பெரியார். அவர் தமிழ்த் தோன்றல் முத்தமிழ் விரகர். உள்ளத்தில் இறைமையும், வாயில் பண்ணும், கையில் தாளமும், காலில் நடமும் கொண்ட ஓர் இசைக்கலை திருஞானசம்பந்தம். அக்கலை அறிவுறுத்திய ஆடலும் பாடலும் கொண்ட இசைநெறி செந்நெறிக்கு மாறுபட்டதென்று சமயவாதிகள் நினைக்குங் காலமும் தோன்றியுள்ளது! வெட்கம்! வெட்கம்! பண்மயமான தெய்வத் திவ்வியப் பிரபந்தம் கோயில் களில் எம்முறையில் ஓதப்படுகிறது? கொலை-கொலை -இசைக் கொலை கோயில்களில் நடைபெறகிறது! கலைநாடு கொலை நாடாகியது. இசைநாடு வசைநாடாகியது. கோயில் பழையபடி கலைக்கூடமாக இசைக்கழகமாக தமிழிசைச் சங்கத்தார் உழைப்பரென்று நாடு எதிர்பார்க்கிறது.20

ம்

"இசைவழியே தமிழ்ப்பாக்களைப் போதிப்பது மரபு. இம் மரபு இதுகாலை வீழ்ந்துபட்டு வருகிறது. மரபைக் காக்க வேண்டுவது