உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தமிழ் ஆசிரியன்மார்கடமை. இக்காலத் தமிழ் ஆசிரியன்மார் சிலர் பாக்களைப் பாடி உரை கூற நாணுகின்றனர். சிலர் தமக்கு இசைஞான மில்லையே என்று வருந்துகின்றனர். நாணமும் வருத்தமும் மரபை அழிக்குமே! பின்னே கண்ணீர் உகுப்பதால் என்ன பயன்?”

"தமிழ் நாடு இதுபோழ்து வழங்குங்காட்சி இரங்கத் தக்க தாயிருக்கிறது.ஒரு சிறு நிலத்துள் எத்துணை வகுப்பு! எத்துணைப் பிளவு! எத்துணைப்பிணக்கு! தமிழ்நிலம் பழையபடி ஒருமைத் தமிழ்நாடாதல் வேண்டும். ஒருமையைக் கோலவல்லது இசை.

சையை -தமிழ் இசையை -ஓம்ப முனைந்துள்ள தமிழிசை இயக்கம், தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் உழைப்பதைத் தனக்குரிய முன்னணி வேலைகளுள் ஒன்றாகக் கொண்டிருக்கு மென்று நினைக்கிறேன்.'

CC

எப்பணியைச் செய்தாலும் எத்துயரைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே" என்பது போல் திரு.வி.க.வின் எப்பணியின் ஊடகத்தும் தமிழ்த் தொண்டு பொதுளியிருந்தது என்பது இக்குறிப்புகளால் விளக்கமாம்.

1. திருக். 552.

3.த.தெ.அணிந்துரை 5, 6.

4.த.தெ.அணிந்துரை 6.

5.த.தெ.அணிந்துரை 7, 8

6.த.தெ.அணிந்துரை 43.

7.த.தெ.44.

8.த.தெ.47.

9.த.தெ.47.

10.த.தெ.48.

17.த.தெ. 51.

12. த.தெ. 53, 54.

13.த.தெ.54.

14.த.தெ.62. 15.த.தெ. 63.

16.த.தெ.64. 17. த.தெ. 422.

18. த.தெ. 424.

20.த.தெ.426-7.

21. த.தெ. 431-2.