உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

எழுதுவதில்லையே" என்று அன்பர்கள் வினவிய துண்டு. அதற்கும் இன்மையோ மறுமொழி? உண்மையே!

கதைநூல்

“நீங்கள் ஏன் கதைநூல் எழுதல் கூடாது" என்று என்னைச் சிலர் கேட்டு வந்தனர். சில பத்திரிகைகளும் விண்ணப்பஞ் செய்து வந்தன. "என் பிறப்பும் கதை; வளர்ப்புங் கதை; என் வாழ்க்கை பெருங்கதை; யான் வாழும் உலகம் நீண்ட கதை; எல்லாம் கதைகளே. இவைகளையொட்டி யான் எழுதும் நூல்களும் கதைகளே. யான் கதை நூல் எழுதாமலில்லையே' என்று சொல்வேன். நாங்கள் சொல்வது இந்தக் கதையன்று; நாவல் என்று அன்பர்கள் கூறுவார்கள்.

"உலகம், வாழ்க்கை முதலியவற்றைப் பண்டை மூதறிஞர் ஓவியமாகவும் காவியமாகவும் தந்தனர். நாளடைவில் ஓவியம் ஒதுக்கப்பெற்று; அவ்விடத்தில் புகைப் படம் புகுந்தது. காவியம் அகன்றது; அங்கே நாவல் குடியேறிற்று. ஓவியமும் காவியமும் வாழ்க்கையினிடம் விடைபெற்றால் உலகம் என்ன ஆகும்? என்ன ஆகுமென்று கூறலாம்? சாக்கடையாகு மென்று சுருங்கச் சொல்லலாம்"2

"பொதுவாக நாவல் உலகம் வாழ்வைப் பண்படுத்தல் அரிது' என்று கூறும் திரு.வி.க. "யானும் ஒரு கதை நூல் எழுதி யுள்ளேன். அஃது எது? அது 'நாயன்மார் வரலாறு" என்கிறார்."

வரலாறு

1906 இல் கதிரைவேற்பிள்ளை சரிதம் எழுதினார் திரு.வி.க. அதுவே அவர்தம் முதல்நூல். அவர்தம் ஆசிரியர் அன்பில் திளைத்து எழுதிய நூல், அதனை எழுதத்தூண்டியவர் சிந்தாதிரிப் பேட்டை வேதாகமோக்த சைவசித்தாந்த சபையார் நூலை அச்சிட்டவரும் அவரே. நூல் எப்படி வெளிப்பட்டது? "அச்சுக் கூடம் அம்மைவார்த்தது. ஈழம் வீழமாயிற்று; சிரோமணி சிரோன் மணியாயிற்று.நூல் மணற்சோறாயிற்று. பிழை மலிவு என் நெஞ்சை எரித்தது. இளமை மனம் எப்படித் துடித்திருக்கும்?” என்பது திரு.வி.க வினா!4

பெரியபுராணப்பதிப்பு

அடுத்துப் பெரியபுராணம் குறிப்புரை உரைநடை ஆகிய வற்றுடன் பகுதிபகுதியாக வெளிவந்தது. (1907-10) அதன் மீள்பதிப்