உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

163

பொன்றும் 1934 இல் வெளிப்பட்டது. பெரியபுராண முதற் பதிப்பின் போதே திருமந்திரப் பதிப்பொன்றும் வெளி வந்தது. பட்டினத்தார் பாடற்றிரட்டு பொழிப்புரை விளக்கவுரை களுடன் 1913 இல் வரைந்தும் பல்லாண்டுகள் சென்றே உலாப் போந்தது!

நூல்கள் :

1917 இல் இதழாசிரியரானது முதல், இதழ்கள் திரு.வி.க. வின் எழுத்தைத் தாங்கின. நூல்களும் தொடர்ந்தன. கால அடைவில் உரைநடை நூல்களைத் திரு.வி.க. பட்டியலிடுகிறார்:

1919 - தேசபக்தாமிர்தம்; 1921 - மனிதவாழ்க்கையும் காந்தியடி களும்; 1921 - என் கடன் பணிசெய்துகிடப்பதே; 1922 - நாயன்மார் திறம் : 1923 - தமிழ்நாடும் நம்மாழ்வாரும்; 1925 - முருகன் அல்லது அழகு; 1925 - சைவத்தின் சமரசம்; 1927 - பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை; 1928 - தமிழ்த்தென்றல்; 1928 - கடவுள் காட்சியும் தாயுமானாரும்; 1929 - தமிழ்நூல்களில் பௌத்தம்; 1929 சைவத் திறவு; 1929 - சீர்திருத்தம் அல்லது இளமைவிருந்து; 1929- இராமலிங்கசுவாமிகள் திருவுள்ளம்; 1930 - நினைப்பவர் மனம் 1931 - சமரச சன்மார்க்கபோதம்; 1934- சமரசசன் மார்க்கத்திறவு; 1934 - சமரசதீபம்; 1935 - தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு; 1935 - சித்தமார்க்கம்; 1936 - சைவ சமய சாரம்; 1937 - நாயன்மார் வரலாறு ; 1938 - முடியா? காதலா? சீர்திருத்தமா? 1939 - திருக்குறள் விரிவுரை; 1940- இந்தியாவும் விடுதலையும்; 1942 - உள்ளொளி.5

வை மட்டுமோ, அறிஞர் திரு.வி.க. நூல்கள். இன்னும் உரைநடை நூல்கள் உள; பாநடை நூல்கள் உள; பிறர் நூல்களுக்கு வழங்கிய முன்னுரைகள் உள. அவற்றை அடங்கல் செய்து காட்டியவர் உளர். அவர் அ. நாகலிங்கம் ; நூல் - திரு.வி.க. வாழ்க்கையும் தொண்டும் - ஒரு கை விளக்கு"

திரு.வி.க.படைத்த நூல்கள் 56. இவற்றுள் பதிப்பித்த நூல்கள் - 8; படைப்பு நூல்கள் -33; பாநூல்கள்-15.

பாநூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை - 2648. அறிஞர்களைப் பற்றிய தனிப் பாடல்கள் 56. ஆகப் பாடல்கள்

2704.

தம் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் - 48. பிறர் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் 72. ஆக முன்னுரை களின் எண்ணிக்கை -

120.