உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

கட்டுரைத் திரட்டுகளாக வெளிவந்த நூல்கள் மூன்று. அவை தேசபக்தாமிர்தம், தமிழ்ச்சோலை, தமிழ்த்தென்றல் என்பன. அவை முறையே 56,126, 17 ஆக 299 கட்டுரைகள்.

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

'என்னுடைய நூல்களில் முதல் முதல் படிக்கத் தக்கது மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்பது" என்கிறார் திரு.வி.க. அவரே அதனை முதல் முதல் படிக்க வேண்டியதன் காரணத்தையும் சுட்டுகிறார்: "ஏன்? அதில் வாழ்க்கையுள்ளதாகலின் என்க"?

தமிழுலகுக்குத் தாம் செய்யும் கடனாகவே மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலை எழுதுவதாகக் குறிக்கிறார் திரு.வி.க.

CC

'காந்தியடிகள் வாழ்விலுள்ள நுட்பத்தையும், அவர் அறிவு றுத்தும் அறத்தையும் தமிழுலகம் உணர்ந்து உய்ய வேண்டு மென்னும் அவா இந்நூலை விரித்தெழுத என்னைத் தூண்டிற்று. இத்தகைக் கடனையன்றி வேறெத்தகைக்கடனைத் தமிழுலகிற்கு ஏழையேன் ஆற்ற வல்லேன்!'8

“உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்'

""

என்னும் திருக்குறளுக்குப் பொருளாக வாழ்ந்தவர் காந்தியடிகள். திருக்குறளை மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழைக் கற்றவர் காந்தியடிகள். "தொழுத கையுள்ளும் படை யொடுங்கும்" என்பதன் மெய்ப்பாக வாழ்வை நிலைபெறுத்தியவர் காந்தியடிகள். இத்தகைய பெருமகனார் வரலாற்றை எழுதும் தமிழ்த் திரு.வி.க.-வள்ளுவ வாய்மொழித் திரு.வி.க. காந்தியடிகள் மாட்டுத் திருக்குறள் நுட்பம் காணாரோ?

"திருக்குறள் என்ன அறிவுறுத்துகிறது? மனிதன் பிறர்நலம் கருதும் அருளாளனாய் வாழ்தல் வேண்டும் என்னும் உண்மையை அறிவுறுத்துகிறது. இதனைத் திருக்குறள் அதிகார முறை வைப்பே இனிது விளக்கும்." திருக்குறளின் நுட்பமும், மனித வாழ்க்கை பிறர்க்குக் கிழமை பூண்டொழுகும் இயற்கை நோக்குடைய தாயிருத்தல் வேண்டும் என்பதே' எனத் தெளிகிறார். குறள் வாய்மை, மெய்யறிவு, பொறுமை ஆகியவற்றை அகழ்ந்து அகழ்ந்து பெய்கிறார். ஏன்? காந்தியடிகள் வாழ்வு, வள்ளுவ வாய்மொழி வழிப்பட்டது என்னும் உணர்வு கூர்தலாலேயாம்.