உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

165

தாய்மொழிப்பற்றில் தலைநின்றவர் திரு.வி.க. அப் பற்றில் ணையிலா ஒரு நிலையுற்றவர் காந்தியடிகள். தம்மைப்போல் பிறரும் வாழ வாழ்ந்து வழிகாட்டிய அடிகளார் தமிழ்நாட்டு மயிலாடுதுறைக்கு எழுந்தருளிய போது அவர்தம் பணித்திறம் பாராட்டி வரவேற்பு மடல் வழங்கப்பட்டது. எம்மொழியில் தரப்பட்டது? தந்தவர்கள் தாய் மொழியிலா? இல்லை! வர வேற்புரையைப் பெறும்அடிகளார் தாய்மொழியிலா? அதுவும் இல்லை! ஆங்கில மொழியில். அது குறித்து அடிகளார் தம் உரையில் அக்கூட்டத்திலேயே குறிப்பிட்டார்:

"வரவேற்பு ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருத்தல் காண்கிறேன். இந்திய தேசியக் காங்கரஸில் சுதேசித் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. நீங்கள் சுதேசிகள் என்று கருதிக்கொண்டு இவ்வறிக்கையை ஆங்கில மொழியில் அச்சிறுத்தினால் நான் சதேசியல்லன். ஆங்கிலமொழிக்கு மாறாக ஒன்றும் யான் சொல்வ தற்கில்லை. நீங்கள் உங்கள் நாட்டு மொழிகளைக் கொன்று அவற்றின் சமாதிமீது, ஆங்கிலத்தை நிலவச் செய்வீர்களாயின், நீங்கள் நன்னெறியில் சுதேசியத்தை வளர்ப்பவர்களாக மாட்டீர்கள் என்று சொல்வேன் (கேளுங்கள்; கேளுங்கள்). எனக்குத் தமிழ்மொழி தெரியா தென்று நீங்கள் உணர்ந்தால் அம்மொழியை எனக்குக் கற்பிக்கவும், அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் அறிக்கையை அளித்து,. அதை மொழி பெயர்த்து உணர்த்தியிருப்பீர்களாயின் உங்கள் கடனை ஒருவாறு ஆற்றினவர்களாவீர்கள்", என்றும், மற்றோரிடத்தில் தாய் மொழியின் வழிப் பிள்ளைகட்குக் கல்விபயிற்றல் மிக முக்கிய மானது. தாய்மொழியை அவமதிப்பது நாட்டுத் தற்கொலையாகும் என்றும் திருவாய் மலர்ந்தருளினார்." இதனை எடுத்துரைக்கும் திரு.வி.க. அடிகளார் 'தாய்மொழி' பற்றி உரைத்துள்ள மணிகளை அகழ்ந்து அகழ்ந்து மாலையெனத் தொடுத்தமைக்கிறார். அவற்றுள் சில வருமாறு:

ஐம்பதாண்டுகளாகத் தாய்மொழி வாயிலாகக் கல்வியறிவு பெற்றிருப்போமாயின், நம் மூத்தோரும் ஊழியரும் சுற்றத்தாரும் நமது கல்வியறிவில் கலப்புற்றிருப்பர். ஒருபோஸோ ஒரு ராயோ கண்டுவரும் புதுமைகள் இராமாயண பாரதம் போல ஒவ்வொரு வீட்டுச் செல்வங்களாகியிருக்கும்.!