உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தாயின் அமுதமொழியால் பெற்ற பயிற்சி அயல் மொழி வாயிலாகப் பயிற்சி தரும் பள்ளிக்கூடத்தில் அற்றுப் போகிறது. பள்ளிக்கூட வாழ்வையும் வீட்டு வாழ்வையும் பிணித்துள்ள பாசத்தை அறுக்கிறவன் நாட்டின் பகைவன். இத்தகைக் கல்வி முறையில் நாம் வீழ்ந்து கிடப்பதால் தாயை வஞ்சித்தவர் ஆகிறோம்!2

ஆங்கிலம் பயில நாம் செலுத்தும் பேரவாவினின்றும் விடுதலையடைவது, நமது சமூகத்துக்குப் பெருந்தொண்டு செய்வ தாகும். சிறு பள்ளிகளிலும் பெருங்கழகங்களிலும் ஆங்கிலமொழி வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. அது நாட்டின் பொது மொழியாகி வருகிறது. நமது உயரிய கருத்துகளெல்லாம் அம்மொழியில் வெளியிடப்படுகின்றன. உயர்ந்த குடும்பங்களில் ஆங்கிலம் இனித்தாய்மொழியாகும் என்று லார்ட்செம்ஸ்பர்ட் நம்புகிறார்.3

46

"அயல்நாட்டுக்கல்விமுறை நம் பிள்ளைகளை நமது நாட்டிலே அயலவராக்கிவிட்டது. இக்கால முறை பெருங் கொலைத் துன்பமாயிருக்கிறது. அயல்மொழி வாயிலாகக் கல்வி பெறுவதினின்றும் நிறுத்தி மாறுதல் நிகழ்த்தவேண்டி ஆசிரியன் மாரை விலக்கிவிடுவேன். பாடப்புத்தகங்கள் ஆயத்தப்படுத்து மளவுங் கூட நான் பொறுத்திரேன்.!'

14

"தாய்மொழிகள் நசுக்கப்படுவது காண என்னால் பொறுத்தல் முடியவில்லை. தாய்தந்தையர் தம் குழந்தைக்கும், நாயகன்மார் தம் நாயகிமார்க்கும் கடிதங்கள் தாய்மொழியில் எழுதாது ஆங்கிலத்தில் எழுத எண்ணுவது குறித்து என் மனம் பொறுக்கவில்லை.'S'

"குழந்தைகட்கு ஆங்கிலக் கல்வி போதிப்பதைக்குறித்து எனக்கும் அன்பர் போலக்குக்கும் பெரும்பெரும் வாதம் நிகழ்ந்த துண்டு. குழந்தைமையிலேயே ஆங்கிலத்தில் கருத்துக் களை நினைக்குமாறும் வெளியிடுமாறும் பிள்ளைகளைப் பழக்கும் இந்தியப்பெற்றோர் குழந்தைகளையும் நாட்டையும் வஞ்சிக்கிறார் என்பது எனது உட்கிடக்கை. அவர் குழந்தைகளை நாட்டு வழக்க ஒழுக்கங்களினின்றும் விலக்கி நாட்டுச் சேவைக்கே அருகரல்லா தவராகச் செய்கிறார். ஆதலால் யான் குழந்தைகளுடன் தாய் மொழியிலேயே பேசுவதென்ன உறுதிகொண்டுள்ளேன்.16"

காந்தியடிகள் தாய்மொழி பற்றிக் கூறிய கருத்துக்களைத் திரட்டியுரைத்த திரு.வி.க. அவர்க்கும் தமிழ் மக்களுக்கும் இருந்த