உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

'வெறியைக் கடந்ததறிவுச் சமயம்' (8-2) என்பது சமயச்சால்பு.

'நல்ல தொண்டை மெல்ல மெல்லத்

தந்தை ஆற்றின் மைந்தன் ஆற்றுவன்' (26-27)

177

என்பது தொண்டுக்கு வழிகாட்டல் பெற்றோரிடத்திலிருந்து பிறக்க வேண்டும் என்பதை நாட்டுவது.

‘பகைமை அறியாத் தகைமையர்அறவோர்'

அறவோர் ஓவியக் காட்சி இது.

""

"மேடை கள் நஞ்சின் ஓடைகள் ஆயின" (60)

என்பது நாட்டைக் கெடுக்கும் இந் நாளைப் பெருநோய் இன்ன தெனப் பொதுமை உரைத்தது.

“ஒருவன் பொருளை ஒருவன் கவரும் கல்வி பயிலாச் செல்வம் (23-24)

என்பது வாழ்வின் வாழ்வு!

திரு.வி.க.வின் நூற்றொண்டு பெரிதும் அல்லலிலேயே பிறந்தது. வறுமை, ஏழ்மை என்பவற்றை வென்றவர் திரு.வி.க. அவை அல்லல் இல்லை. தொழிலாளர் போராட்டம். அரசியல் சிக்கல் என்பவையும் அவற்றால் இரவைப்பகலாக்கி இளைத்த துயர்! இயற்கையை அவர் ஒறுக்க, அவ்வியற்கை அவரை ஒறுத்துப் பார்வையைப் பறித்ததும், படுக்கையில் கிடத்தியதுமாம் நிலை.

படுக்கை நிலையிலே நூற்றொண்டு செய்ததை முதுமை உளறலில் உரைக்கிறார்.

தோற்றுவாய்

“அந்த நாட்களில்சிந்தனைப் பொருள்களை விழிகள் நோக்க எழுதுவன் கையால்;

படலம்:

அறுபத் தாறினில்சிறுபரல் ஆணிப் படலம் கண்ணைப் படர்ந்து மறைத்தது; பழைய வண்ணம் விழிகள் நோக்க எழுதும் பேற்றை இழந்தனன் பாவி!