உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

உளத்தெழும் கருத்தை உளறு கின்றனன் உளறலும் நூலாய் வெளிவருகின்றது; ஒற்றைக் கண்ணிடர் உற்ற வேளையில் பரம்பொருள் நூலைப் பகர்ந்தனன் உரையால். இரண்டு கண்ணொளி வறண்ட இந் நாளினில் இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால் இருமையும் ஒருமையும் அருகன் அருகே பொருளும் அருளும் மார்க்கிஸ் காந்தி

சித்தந் திருந்தல் செத்துப் பிறத்தல்

என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால்.

உரைநடை:

“பழைய உரைநடை, விழுமிய அகவல் பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது உளறுமென் அகவலும் ஒருவித உரையே; பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின் கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்; பாவின் அமைப்போ ஓவியம் ஆகி உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும்; மொழிந்த பின்னம் அழிதல் அரிதாம்

ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன்"

உரைநடை நூல்கள் யாப்பு நூல்களாகக் கோப்புற்ற வகை இதுவாம்.

நோயே வாட்டியும், அலக்கணே அலைத்தும், கண்ணொ ளியையே கவர்ந்தும், படுக்கையில் கிடத்தியும் திரு.வி.க. தோற்றாரோ? இல்லை! இல்லை! ஊழை ஒன்று ஒன்றாக உலைவின்றி வென்ற வரலாறு அவருடையது. ஊழையும் உப்பக்கங் கண்டதும், சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிட்டதும் அவர்தம் வாழ்வு. வெற்றி கொண்ட வரலாற்றை அவர் வாழ்வியல் காட்டும்; வாக்கும் காட்டும். வாக்குகளுள் ஒன்று:

தொல்லைநோய்க்கு மருந்து :

தொல்லைநோய்க்கு மருந்துண்டோ? மருத்துவர் என்ன விடையிறுப்பரோ அறிகிலோன். எனக்கொரு மருந்து துணை செய்து வருகிறது. அஃதென்னை? அஃது எனது தாய்மொழி; அமிழ்தினும் இனிய தாய்மொழி. என் போன்றார்க்கென்று