உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

179

தமிழ்க்கலைகள் தோன்றினவோ என்று யான் அடிக்கடி நினைப்பது

முண்டு.

தொல்காப்பியனார்,

நக்கீரனார்,

நல்லந்துவனார்,

திருவள்ளுவனார், இளங்கோ, சாத்தனார், திருத்தக்க தேவர், மாணிக்கவாசகனார், நம்மாழ்வார், சேக்கிழார், கம்பர், பரஞ் சோதியார் முதலிய தமிழ்மருத்துவர் யான் நூலெழுதும் சிற்றறை யிலும் வீற்றிருக்கின்றனர். அவர் முன்னே தொல்லை அணுகி எங்ஙனம் நோய் செய்யும்?

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

“குழலினிது யாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”.

இப் பாக்களின் சொல்லிலும் பொருளிலும், இரண்டும் கலந்த ஒருமையிலும் ஒன்றி ஒன்றித் திளைக்கும் மனம் என்நிலை எய்தும்? அம்மனத்தைத் தொல்லை உறுத்துங்கொல்?

தொல்லைவிளையும் போதெல்லாம் பெரிதும் நூலை எழுதும் அல்லது பதிப்பிக்கும் வாய்ப்பை அடியேனுக்குக் கூட்டும் ஆண்டவன் அருட்டிறத்தை என்னென்று வியந்து கூறுவேன்! இல்லையேல் தொல்லை என்னை என் செய்யுமோ?

எனது வாழ்வியல் தொல்லை ஒரு பக்கம்! அதைத் தகையும் மருந்து மற்றொரு பக்கம்! தொண்டு இன்னொரு பக்கம்! "(திருக்குறள் விரிவுரை பாயிரம்; அணிந்துரை - 8, 9)

'நூற்றொண்டு' இவ்வளவில் நிற்க, நூற்றொண்டி

விரிவாக்கம் தொடர்கிறது.