உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அ. நூற்றொண்டின் விரிவாக்கம்

நூலாசிரியருள் பெரும்பாலோர் தாம் இயற்றும் நூலளவுடன் கடனாற்றுதல் கண்கூடு. ஆனால் திரு.வி.க.வின் நூற்றொண்டு அவரளவில் அமைந்தது அன்று. பிறர் பிறர் நூலாசிரியராக இலங்குதற்கும் வழிவகுத்துத் தந்ததுடன், வாய்ப்பும் தந்தார்! இது பாராட்டி வரவேற்கத் தக்க அருமைப்பாடுடையதாம்.

எழுத்தாற்றல் உடைய பலர், பிறர் எழுத்தாற்றலைப் பாராட் டுவது இல்லை; ஊக்குவதற்குப் பதிலாக உலைத்து விடுவதும் உண்டு. திருந்துதற்காம் வழிகாட்டுதல் செய்யா தொழியினும். வருந்துதற்காம் செய்கையைச் செய்யாதிருப்பினும் குற்றமில்லை. ஆனால் அதனையும் செய்வாருளர்.

திரு.வி.க. பிறவெழுத்தாளர்களுக்குச் செய்த தூண்டுதல், துணை, ஏந்து இன்னவற்றைத் தொகுப்பின் அதுவே மிக விரிவுடையதாகும். ஆனால் அவ்வாறு விரித்துக் கூறாமல் குறிப்பிடத்தக்க சிலரையாவது சுட்டிச் செல்லுதல் முறையாம். வெ.சாமிநாதர்

A

சிக்கலான அரசியல் செய்திகளையும் செவ்வையாகப் புலப்படுத்தவல்ல திறவோர் வெ. சாமிநாத சர்மா. அவர் வாழ்வு இதழ்ப்பணியும், நூற்பணியுமாகவே திகழ்ந்தது. இயன்ற அளவும் தனித்தமிழ்ச் செவ்விய நடையில் தெளிவான நடையில் எண்ணற்ற அரசியல் - வரலாற்று நூல்களை எழுதிக் குவிக்கும் தவத்தை மேற்கொண்டார். அவர் நடையழகராகத் திகழ வாய்த்த தூண்டலாகவும் துணையாகவும் நின்றவர் மணவழகராம் கலியாண சுந்தரர்.

திரு.வி.க. வை முதன்முறையாகச் சந்திக்கிறார் சர்மா. 'தேச பக்தன்' இதழ் தொடங்க இருக்கும்பொழுது அது. அவ்விதழ்த் தொண்டில் ஈடுபடுதற்காகவே நேரில் கண்டார். "தேசபக்தன் தொடங்குநாள் எந்த நாளோ. அந்த நாளே தொடங்கி வேலை