உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பிற்பட்டோராகவும், அறிவொளி தந்தோர் அறிவு வளமிலராகவும், அறிவுவளமிலார் அறிவு வளமுற்றோ ராகவும், கலைச்செல்வம் பல்கியோர் கலையறியா மாக்களாகவும், கலையறியா மாக்கள் கலையறி செல்வராகவும், நாகரிகம் வழங்கியவர் அல் நாகரிகராகவும், அல் நாகரிகர் நாகரிக ஏந்தலராகவும் வரலாற்றில் தடம் புரண்ட காட்சி உருவாக்கப்பட்டுவிட்டது. உலகத்தின் முதன்மொழியாம் தமிழ், வட்டாரமொழியெனவும், தமிழ் மாந்தர் வேறொரு நிலத்தினின்று வந்தேறியவர் எனவும், இந்திய நாகரிகம் என்பது வடஇந்திய நாகரிகமே எனவும் திட்டமிட்டுத் திரையிட்டு மறைக்க நேர்ந்துவிட்டது.

கடல்கொண்ட குமரிக்கண்டமே தமிழர் பிறந்தகம் என்றும், முதன்முதன் மாந்தன் ஆங்கேயே தோன்ற உலகெலாம் பரவினான் என்றும், இந்திய நாகரிகத்தை ஆய்வார் முதற்கண் தெற்கிலிருந்தே தொடங்குதல் வேண்டும் என்றும், தமிழ் திரவிட மொழிகளுக்குத் தாயும் ஆரிய மொழிக்கு மூலமுமாம் என்று, உண்ணாட்டு வெளிநாட்டு அறிஞர்களால் இதுகால் ஒளியுறுத்தப்பட்ட நிலையிலும், உண்மை வெளிப்பட உலகுக்குத் தோன்றிற்றில்லை! ஏழுதிரை விலக்கியே ஒளிச்சுடர் காணல் போலும், மூடு திரையகற்றியே கலையெழில் காட்சியை மேடையில் காணல்போலும், செயற்பாடுகள் வேண்டியுள. இந்நிலையில் திரு.வி.க. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்பெருமக்கள் வரலாற்றைத் தம் வரலாற்றொடும் இணைத்தும் பிணைத்தும் காட்டியுள்ளமை போற்றுதற்குரியதாம்.

‘தம் வரலாற்றின் தந்தை' யென இளங்கேவடிகளைக் கூற வாய்க்கின்றது. அவர் தம் வரலாற்றுச் செய்தியைச் சிலம்பின் நிறைவில் கண்ணகியார் வாக்காகக் காட்டியுள்ளார்."என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி' எனப்பாராட்டுகிறார், தமிழகத்து வரலாற்றைக் கொண்டு புனையப்பட்ட அக்கதைக்குப் பின்னே, சேக்கிழார் அப்பணிக்கு வளமூட்டுகிறார். திரு.வி.க. மிகப்பேரளவில் அத்தொண்டை நிலைப்படுத்துகிறார்.

இளங்கோ என்பது இயற்பெயரா? 'கோவூர் கிழார்’ ‘ஆவூர் கிழார்' என்பவை பெயர்களா? ஓரேருழவர், தொடித்தலை விழுத்தண்டினார். குப்பைக் கோழியார், வில்லக விரலினார்' என்பார் அவர்தம் தொடரால் பெயர் சுட்டப்பட்டார்கள் எனின். இவர்கள் பெயர்கள் தொடர் புடையார்களால் பெரியண்ணன்,