உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வரலாற்றுத் தொண்டு

திரு.வி.க. வரலாறு 'வாழ்க்கைக்குறிப்புகள்' என்னும் பெயரால் வெளிப்பட்டது. அவர் வரலாறு மட்டும் அதில் இல்லை. பன்னூற்றுவர் வரலாறு பயின்ற வரலாறு அவ்வொன்று. தம்மொடு தொடர்புடைய அறிஞர்களைப் பற்றிய குறிப்புகளைத் தமிழறிஞர், கூட்டுறவினர், தோழர்கள், சமயத்தவர், சீர்திருத்த நேயர் சிலர், தொண்டர், தொடர்பினர் என்னும் பகுப்பில் அவ்வப்பொருள் பற்றிய வரலாற்று நிறைவில் குறிக்கிறார். இவ்வெழு பாற்பகுப்பினரும் முறையே 67, 39, 38, 29, 23,12, 52 2 ஆக 260 பக்கங்களின் ஆட்சி புரிகின்றனர். இவ்வாட்சிப்பக்கங்களை மட்டுமன்றியும் இவர்களை யன்றியும் பிறபக்கங்களில் ஆட்சி செய்வாரும் உளர்.

தமிழ் வரலாற்றைப் பொறுத்த அளவினும் இவ்வறிஞர்கள் அனைவர் வரலாறும் எண்ணத் தக்கதும் போற்றத் தக்கதுமேயாம். அரசியல் தொடர்பாளர்கள் தமிழ்த் தொண்டும், தமிழ்போற்றிக் கொண்டு வளர்ந்துள்ளதே! தொழில் தொண்டர் தாமும் தமிழ்த் தொண்டராக இயங்கியுள்ளனரே! சமயத்தையும் தமிழையும் பிரிக்கவொண்ணா வகையில் சமயத்தொண்டினர் ஊன்றி யுள்ளனரே! சீர்திருத்தரும் தொண்டரும் தமிழ் வளத்திற்குப் பாடுபட்டுள்ளனரே; தொடர்பினர் - திரு.வி.க. வின் உழுவல் தொடர்பினர் - எப்படித் தமிழ்த்தொண்டில் தலைப்படாது இருந்திருக்கமுடியும்? இவ்வாறாக ஒருபெரும் தொண்டர் வரலாற்றில் பலப்பல தொண்டர் வரலாறுகள் செறித்து வைக்கப் பட்டுள்ளன என்று சொல்லலாம்.

வரலாற்று வறுமை:

தமிழ் நாட்டு வரலாறும், தமிழ்ப்பெருமக்கள் வரலாறும் செவ்விதின் வரையப்பட்டில். செவ்விதில் தொகுத்து முறையாக வெளிப்படுத்தி ஒருநிலைப்பட்ட வரம்பில் ஆட்படுத்தவுமில்லை. அதனால் பிற்பட்டோர் முற்பட்டோராகவும், முற்பட்டோர்