உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இயங்கும் மொழியைப் பேசும் தமிழ்மக்கள், உலக மொழிகள் எல்லாவற்றையும்விட எழுதப்படிக்கக்கற்றல் எளிதாக உள்ள ஒருமொழியைப் பயிலும் தமிழ்மக்கள், எழுத்தறிவும் இல்லாது வாழ்தல் தகுமோ? இந்நிலை ஒழிக. நன்னிலை எய்துக! தமிழ் மக்களே எழுங்கள்! அனைவரும் முயலுங்கள்! அறிவொளியைப் பரப்புங்கள்".

-இது திரு.வி.க. நடையா? மு.வ. நடையா? திரு.வி.க.வின் நடையில் தோய்ந்த மு.வ. நடை! (படியாதார் படும்பாடு-96)

திரு.வி.க. எழுதிய நூல் முகவுரைத் தொண்டால் ஊக்கப் படுத்தப்பட்டவர்கள் எத்துணைப்பேர்? அவர் தம் மேடைத் தொண்டால் ஊக்கப்படுத்தப்பட்டவர்கள் எத்துணைப்பேர்? இவர்கள் செய்துள்ள நூற்றொண்டையும் விரிவாக்கமாக விளம்புதல் தகுமன்றோ?