உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

183

சர்மாவின் மேல்கொண்ட அன்புச்சான்று மட்டும் காட்டு வதன்று; பிழையின்றி நூல் அச்சிடப்பட வேண்டும் என்னும் தமிழ்க் காதலையும் காட்டுவதாம்! அவர் தம் நூலில் ஒரு பிழைதானும் காண்டற்குக் கூடுமோ?

சர்மாவின் நூற்றொண்டைத் திரு.வி.க. நூற்றொண்டின் விரிவாக்கம் என்னத் தடையுண்டோ?

கல்கி

வரலாற்றுக்கதையின் முன்னோடியாகவும், சுவை சொட்டச் சொட்ட எழுதும் எழுத்தாளராகவும் திகழ்ந்த கல்கி யின் பெயரை நாடு நன்கு அறியும்; அவர் எழுத்தையும் அறியும். எத்தனை எத்தனை ஆயிரம் பக்கங்கள் தொடர் கதை எழுதினார்! வெடிச்சிரிப்புச் செய்தி எழுதினார்! அவர் திரு.வி.க.வினிடம் வளர்ந்த நவசக்தி அன்பர் அல்லரோ! செல்வர் அல்லரோ! அவர் படைப்புகளைத் திரு.வி.க. படைப்புகளின் விரிவாக்கம் என்ன தவறென்ன?

முவ.

திருக்குறள் என்றால் மு.வ. உரை எனத் தமிழுலகு அறிந்து ள்ளதே! பத்திலக்கம் படிகளுக்கு மேலல்லவோ அவ்வுரை நூல் விற்பனையாகியுள்ளது. அவர் எழுத்துலகில் அடியெடுத்து வைத்த நாளிலேயே திரு.வி.க.வின் அணுக்கத் தொண்டராய்த் தழைத்தவர் அல்லரோ!

"கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும் கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம்; தோட்டங்கட்குப் போவோம்; இயற்கையை எண்ணு வோம்; பேசுவோம்; உண்போம். என்று தம் வாழ்க்கைக்குறிப்பிலே சுட்டும் நெருக்கம் சென்னைக்கு வந்த காலை, குடும்பப்பிள்ளை யாகும் சீர்மையை வழங்குகின்றது! அவர் செய்த நூற்றொண்டில், திரு.வி.க.வின் விரிவாக்கம் இல்லையெனலாமா?"

"நம் தமிழ்நாடோ தூங்குகிறது. இன்னும் தூக்கமா? தமிழ் மக்கள் நிலையை உன்ன உன்ன உள்ளம் குழைகிறதே! உலகிற்குக் கலையறிவை ஊட்டிய தமிழ்மக்கள், உலகின் முதன்முதலில் எழுத்துவடிவம் பெற்ற மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழ் மக்கள், மொழிகள் பலவற்றுக்குத் தனிப்பெருந் தாயாய்