உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

ஞானியாரடிகள் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

ஞானியார் சுவாமிகள் பேச்சைக்கேட்டபின்னைத் தமிழ் நாட்டில் மற்றுமொரு நாவலர் இருத்தலைக்கண்டேன். தமிழ் நாட்டிலும் கிளாட்ஸன்கள், சுரேந்திரர்கள் இருக்கின்றார்கள் என்று என் நெஞ்சம் எண்ணியது.

மாணிக்கநாயக்கர்:

நாயக்கர் தொல்காப்பியக்கடலை அடிக்கடி கடைவர் கடைந்து கடைந்து அமிழ்தம் எடுப்பார். 'அதை நீங்கள் ஏற்கிறீர்களா?' என்று என்னைக் கேட்பர்.

தமிழ்க் கா.சு.:

பழந்தமிழ் நூல்களின் உள்ளுறைகளை நோக்குதற் கென்று கா.சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது போலும். அவரிடத்திலிருந்து பல திறத் தமிழ்ப்புதுமைகள் பிறக்கும்.

அசலாம்பிகையார் :

பண்டித அசலாம்பிகை அம்மையார் இக்கால ஒளவையார். பாண்டித்துரை:

பாண்டித்துரை தேவர் பாலவனத்தம் ஜமீன்தார். மதுரைத் தமிழ்ச் சங்கம் கண்டவர்; தமிழ்ப்புலவர்; பெரும் புலவர். அவர்தம் அரியவாழ்க்கை தமிழுக்கே அர்ப்பணமாகியது.

பரிதிமாற் கலைஞர் :

பரிதிமாற்கலைஞர் நீண்டநாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் இவர்ந்திருப்பாள்; முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்.

சோமசுந்தரபாரதியார் :

பாரதியார் வக்கீல் தொழில் அளவில் நின்றாரில்லை. அவர் கம்பர் திருவள்ளுவர் தொல்காப்பியர் முதலியவர் மன்றங்களிலும் பழகிவந்தார். அப் பழக்கம் அவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்குத் தூக்கியது.