உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரியார்:

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

189

இப்போது வையாபுரிப்பிள்ளை தமிழ்நாட்டுப் பதிப்பா சிரியர் உலகிலே ஒரு வான்மணியெனத் திகழ்கிறார். ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, சாமிநாத ஐயர் ஆகியவர் இனத்தில் சேர்ந்தவரானார்.

கோதண்டபாணியார் :

கோதண்டபாணி பிள்ளை நெஞ்சம், பல புலவர் உலகைக் கண்டு கண்டு அவைகளைக் கடந்து கடந்து நக்கீரர் உலகில் நிலைத்தது. அவர் நெஞ்சம் நக்கீரர் ஆயது; அவர் நக்கீர ரானார். சமயத்தவர் 16 பேர்களைச் சுட்டுகிறார் திரு.வி.க. அவருள்

இருவர்:

பூவை கலியாணசுந்தரர் :

அவர் காலத்தில் அவரது சாற்றுகவி பெறாத நன்னூல்களைக் காண்டல் அரிது.

‘ஸ்ரீபால்’

ஸ்ரீபால் இளைஞர். அவர்தம் இளமை வாழ்க்கை ஜீவ காருண்யத் தொண்டுக்குப் பயன்பட்டுவருவது எனக்குத் தெரியும். ஸ்ரீபாலின் தவமே தவம். அவர் பிறவியே பிறவி!

சீர்த்திருத்த நேயர்களில் பதினைவர்

கின்றனர். அவருள் ஒருவர்.

வரதராசனார்:

எண்ணப்படு

வரதராசனார் தமிழறிஞரா? சீர்திருத்தக்காரரா? அவர் தமிழறிஞர் என்பது வெள்ளிடைமலை. சீர்திருத்தக்காரர் என்பது உள்ளிட்ட விளக்கு.

சி.எம். இராமச்சந்திரர் :

செட்டியாரின் ஆராய்ச்சி மொழிகளையும் பாட்டுக் களையும் யான் பார்த்திருக்கிறேன். அப் பார்வை, இராமச்சந்திரஞ் செட்டியார் ஒரு கலைக்கூடம்' என்று தெரிவித்தது.

தொண்டர் ஐவர் துலங்குகிறார். அவருள், ஒருவர்: