உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

சுத்தானந்தர்:

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

நீலவானம்; ஒரே அமைதி; மணிகள் ஒளிர்கின்றன; ஒரு தமிழ்மணி பொலிகிறது; அம்மணியே சுத்தானந்தம்.

தொடர்பினர் இருபத்து நால்வர் இசைக்கப்படுகின்றனர் அவருள் முதல்வர் தாய்; ஆறாமிடத்தார் மனைவியார்; ஏழாமிடம் மகனார்; பின்னைப் பிறர் பிறர். இவருள் இருவர்:

இராமலிங்கனார்:

இராமலிங்கம் மாணாக்கராயிருந்தபோதே அவரைத் தமிழ்க்காதல் மணந்தது. அக் காதல் அவரைத் தமிழ் எம்.ஏ. ஆக்கியது. அவர் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ் காண்பதில் கண்ணுங் கருத்துமுடையவர். பிறமொழிச் சொற்களால் தமிழ் அன்னைக்கு அம்மைநோய் உண்டாதல் கூடாதென்பது அவரது கொள்கை.

விசுவநாதனார் :

ஹிந்திக் கிளர்ச்சி வீறிட்டது. நாயக்கர் சிறை புகுந்தார். அவ்வேளையில் அக்கிளர்ச்சியை விசுவநாதன் நடத்திய முறையும் ஒழுங்கும் நேர்மையும் திறமும் என்னை வியக்கச் செய்தன.

து.

விரிந்த தொண்டர் எண்ணிக்கையைச் சுருக்கி, தொண்டுச் செய்தியையும் சுருக்கி, வைக்கப்பட்ட குறுந்திரட்டு "தொண்டர் தம் பெருமை சொல்ல வொண்ணாதே" என்பது ஒளவையுரை.