உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நடை

10. தமிழ் நடை

திரு.வி.க.வின் மொழிநடை, தமிழ்நடை; தீந்தமிழ் நடை; தேன் ஒழுகும் தீந்தமிழ்நடை.

அந்நடை தென்றலாய்த் தவழும்; கொண்டலாய்க் கெழுமும்; கோடையாய் முழங்கும்; வாடையாய் வாட்டும் இடங் காலம் பொருளியற் கேற்பச் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும்! ஓரிடத்தில் சிற்றருவியாய்ப் பொழியும்! மற்றோரிடத்தில் புவியருவியாய் வீறும்; இன்னோரிடத்தே சண்பக அடவியாய்ப் பொதுளும்; வேறோரிடத்தே தேனருவியாய்த் ததும்பும்! அவற்றுள் பழங் குற்றாலக் காட்சியும் உண்டு! புதுக்குற்றால மாட்சியும் உண்டு! திரு.வி.க.வின் தமிழ் உரைநடைக்காட்சி, குற்றால அருவி நடைமாட்சி!

சிறிய தொடரா? சின்னஞ்சிறிய தொடரா? ஒரே ஒருசொல் தொடரா? உண்டு! பெரிய தொடரா? பென்னம்பெரிய தொடரா? ஒரு பத்தியாய் விரிந்த தொடரா? உண்டு! திரு.வி.கவின் நடையில் வினாக்கள் மிகுதியா? உணர்ச்சிக் குறிகள் மிகுதியா? ஒன்றில் ஒன்று மிகுதி என்பதைக் குறியீட்டு அடையாளங்கள் காட்டும்! அவற்றொடு இரட்டை மேற்கோளும் ஒற்றைமேற்கோளும் போட்டியிடும்; கால்புள்ளி அரைப்புள்ளிகள், கலைமுகம் காட்டும். அவர் எழுத்தை அச்சுக்கோக்க, எழுத்தில் பாதியளவு குறியீடுகளின் அச்சு வேண்டும்! செம்பாதி அன்று பெரிது என்பதும் சிற்சில இடங்களில் விளங்கும்! அவர் நடைத்திறம் இதழ்த்தொண்டில் கண்டோம்? இங்கும் அவர் நடை அவர் நடையாகவே நடக்கின்றது.

"மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப் போராட்டம் பொருளற்றதென்பது எனது உள்ளக்கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப்பழக அவருக்கென்று ஒரு