உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிவாளன் புகல்வு

'கா.சு.' என்னும் சுருக்கத்தின் பெருக்கம். காந்திமதி நாத சுப்பிரமணியனார்! பிறப்பு 1889. ஈராண்டு சென்றால் நூற்றாண்டு!

கா.சு.சட்டப் பேரறிஞர்.ஆனால் அச்சட்டம் அரசுச் சட்டத்திற்குப் பயன்பட்ட அளவினும் அன்னை மொழிச் சட்டத்திற்கே பயன்பட்டது.

சட்டம் என்பது ஏடு, திருத்தம், முழுமை, வரம்பு என்னும் பொருள்களையும் தரும். சட்டம் பிள்ளை என்பவன் தலைவன்; வகுப்புத் தலைவன். இவண், தமிழர் தலைவர்!

'கா.சு.'வின் தமிழ்ப் புலமை, தமிழ்க் 'கா.சு.' ஆக்கியது. தமிழ்க்‘கா.சு.' ஆக விளங்கிய அவர் தமிழ்க்கு ஆசு ஆகவும் (ஆசு - பற்றுக்கோடு) விளங்கினார் என்பதற்கு அவர் இயற்றிய ஒவ்வொரு நூலும் சான்று. அவற்றுள் இவண் சுட்டும் ஒன்று தமிழர் சமயம்

தமிழர்சமயம் என்பது நூற்பெயரெனின், சமய ஆய்வளவில் நிற்பாரும் உண்டு. அவர் நோக்கு தமிழர் அல்லர்; தமிழர் சமயமே!

'கா.சு.' தமிழரில்லாமல் அவர்தம் சமயமென ஒன்றேது' என எண்ணுபவர். தமிழர் தாமும் தமிழ் என்னும் மொழிப் பெயர் வழியால் அன்றோ பெயர் பெற்றவர் என எண்ணுபவர். அதனால் தமிழ் ஆய்வுண்டு! தமிழர் சமய ஆய்வும் உண்டு. ஒன்றன் மேல்ஒன்றாம் மாடமென ஓங்கி உயர்ந்து செல்லல் உண்டு.

தமிழ்க் கா.சு. சிவனெறி அழுத்தர்; முப்பொழுதும் எப் பொழுதும் முழுநீறு பூசுபவர்! எனினும் பொய்யடிமை இல்லாப் புலவர்! அதனால், வைணவம் என்னும் மாலியத்தை மறவார்; ஒதுக்கார்!சிவனியமும் மாலியமும் செந்தமிழ்ச் செந்நெறிகளே என்பதை நிறுவுவார்!