உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

"சிவனலால் தேவியில்லை; சிவனியமன்றிச் சமய மில்லை"- என்னும் கருத்துடையார், மாலியப் பகுப்பைச் சிவனிய இணைப் பாக்கிக் கொள்வரோ? பெண்ணுருஒரு திறனாகப் பிறங்கிய அம்மையப்பனின் முன் வடிவாக (அம்மை வடிவாக) மாலியத்தைக் காண்பவர். மூடுதிரையிட்டு முழு மறைப்புச் செய்வரோ? முனைப்புக் கொண்டு வெறுப்பால் ஒதுக்கி விடுவரோ? இரு கண்ணில் ஏற்ற மாற்றம் காண்பார், சார்பு நோக்கர்; சால்பு நோக்கர் அல்லர் என்க.

சிவப்பு கறுப்பு என, வண்ண வேற்றுமை என்ன வேற்றுமை? செவ்வண்ணம், சேயோன், கருவண்ணன், மாயோன்! முன்னவன், செந்தழல் வண்ணன்; பின்னவன், கருமுகில் வண்ணன், நெருப்பும் நீரும் இன்றி வாழ்வென்னாம்? வான் சிறப்பு என்பது என்ன? வெம்மையால் உண்டாம் தண்மை அன்றோ? வெம்மையும் தண்மையும் இணையா - இணைந்தமையா - நிலை உய்யுமோ?

ஏறும் வெம்மை எரிவாம்! வீறும் தண்மை உறைவாம்! இவை இணைவின் வழிப்பட்டதே வாய்த்த நிறைவாம்.

கா.சு. சமய வழி, காசிலா (குற்றமிலா) வழி! அன்றியும் கா.சு.ச் செலவிலாச் சிக்கன வழி! இயற்கை வழி, இறைவழி எனக் காண் பார்க்குக், கருதுதல் என்னும் ‘கைப்பொருள்' போதுமே!

சமயம் நெறிபயில்நிலையமாகக் காட்சி வழங்கியது ஒருகால்! அதனால், தொண்டின் உயிர்ப்பகமாகத் திகழ்ந்தது! பின்னாள் தமிழர் சமயம், தடம் மாறியது; தன்னிலை கெட்டது! தமிழை மறந்தது; தமிழ் நெறியாம் பிறப் பொப்பைப் பிறழ விட்டது; பேய்மைப் பேராட்டமும், பேராட்டமும் மூட்டும் தன்னலச் சாதிக்கும் பொருளுணர்ந்து ஓதற்கு இடமிலா வேற்றுமொழி வழிபாட்டுக்கும் இடமளித்தது. தூய சமயம் கொடு முடியினின்று குப்புற வீழ்ந்து தீய சமயமாகி விட்டது!

வீழ்ந்ததை எழுப்புவது வேண்டும்; ஆம்; விழிப்புறுத்த வேண்டும்.உறங்குவாரை எழுப்பலாம்; உறங்குவாராக நடிப்பாரை எழுப்புவது எளிமையோ? உறக்கமும் ஒரு நாள் இரு நாள் ஓரா ண்டு ஈராண்டு, உறக்கமோ? நெட்டிடையாகப் பட்ட மரமென உறக்கம்! உயிர் மட்டும் தாங்கி உணர்வெதுவும் இல்லா மயக்க நிலைப் பட்ட பேருறக்கம்! எல்லாம் மறந்தபேருறக்கம்!