உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

9

தமிழ் என்பதை மறந்து, தமிழினம் என்பதை மறந்து தமிழர் சமயம் என்பதை மறந்து மொழியாலும் வழியாலும் வேற்று மொழிக்கும் வேற்று வழிக்கும் கொத்தடிமைப் பட்டுவிட்ட தன்னிலை மறந்த மயக்கம்! எப்படி எழுப்புவது? வெற்றி கிட்டுமா?

தவத்திரு மறைமலையார் கிளர்ந்தார்! தமிழ் வடிவாக - தனித்தமிழ் வடிவாகத் திகழ்ந்தார்! அவர்க்குத் தமிழின் தனித்தன்மை விளங்கிற்று! தமிழர்சமயம்விளங்கிற்று! தமிழர் நெறி விளங்கிற்று! தமிழர் நிலையும் விளங்கிற்று! அவர்மெய்கண்டாரானார்! நக்கீரரானார்! சிவஞான முனிவரானார்! வள்ளுவரும் தொல் காப்பியரும் புன்முறுவல் பூத்து வாழ்த்துக் கூறும் வழிகண்டார்!

மெய்கண்டார், : "பிறர் என்ன எண்ணுவர்” என எண்ணித் தாம்கண்ட மெய்ம்மையை மறைப்பரோ? மறைப்பின், நெஞ்சகம் ஒழித்த வஞ்சகர் என்னும் பொய்யராவரே அன்றி மெய்யர் ஆவரோ?

-

கண்

தமிழையும் தமிழர் சமயத்தையும் இருகண்களென மணிப்பாவைகளெனக் கொண்டார்! இசையும் வசையும் வாய்மை நோக்கர்க்கு வருபொருளே எனத்துணிந்தார். எழுதினார்; பொழிந்தார் தாம் கண்ட மெய்ப்பாடுகளை!

-

'மறுப்புகள்' 'வெறுப்புகள்' 'எதிர்ப்புகள்' 'ஏசல்கள்' பழிப்புகள் தூறல்கள்! எல்லாம் எல்லாம்! எவரிடமிருந்து- தமிழரிடமிருந்து! ஆயினும், நிமிர்ந்து நின்றார்; நிலைத்து நின்றார்! வாடையும் கோடையும் தாமே அடங்கும் வரை தனித்து நின்று தாங்கினார்! கொண்டலும் தென்றலுமாக நின்று நிலைப் பணி செய்தார்!

அடிகளார் பணிக்கு - இருதிறப் பணிக்கு வழிமுறை வேண்டாவா? இல்லாக்கால் கண்ட வளமை மூடுண்டன்றோ போம்! சமயக் கண்ணைக் காக்கக் கிளர்ந்தார் தமிழ்க் கா.சு. மொழிக கண்ணைக் காக்க முகிழ்த்தார் மொழிஞாயிறு பாவாணர்!

-

ஓராலமரத்து, அதுவும்-மூதாலமரத்து இணையிலா இரு சுவடுகள் எனக் காசுவும் பாவாணரும் பரந்தும் விரிந்தும், ஊன்றியும் உறைத்தும் பணித்திறம் பூண்டனர்! அடிகளார் பணிக்கு வழிஞர் பணித்திறம் ஊட்டமளித்தது! ஊற்றமுமளித்தது.